“இன்னும் எடுக்கலை”
”சரி வா” என அவளது தோளை பிடித்ததும் உணர்ந்தான். எங்கோ இது போல உணர்ந்தது நினைவுக்கு வந்தது அதற்குள் அவள் கத்தினாள்
”யோவ் விடுய்யா என்னை”
“ஏண்டி கத்தற, சென்னையில இருந்து வந்த பொண்ணா நீ, உன் அண்ணன் பேசறதுக்கே நேரம் எடுக்கறான் நீ என்னடான்னா இப்படி பேசற வா எங்காவது தொலையப் போற” என அவளது கையை பிடிக்கவும் அவள் மீண்டும் கத்தினாள்.
“கையை விடு”
“தொலையப்போற”
“நான் ஒண்ணும் குழந்தையில்லை விடு கையை”
என கத்த அவனும் விட்டான்.
”சரி வந்து சேரு” என சொல்லிவிட்டு தாஸுடன் முதலில் லக்கேஜ் இருக்கும் இடம் சென்றான். வரிசையாக லக்கேஜ்கள் வர அதில் ரோஸ் நிற பெட்டி வந்தது. அதில் சரண்யா என இருக்கவே ஒன்றை எடுத்தாள். அதே போல 2 பெட்டி வரவும் அதை தாஸ் எடுத்துக் கொள்ள தேவா திரும்பி பார்க்க சரண்யா இல்லாமல் போகவே பயந்தான்
”எங்க போனா தொலைஞ்சிட்டாளோ, இன்னிக்கி பார்த்து ஏகப்பட்ட கூட்டம் எங்க போய் அவளை தேட” என நினைத்துக் கொண்டே 2 பெட்டிகளையும் ஒரு ட்ரேயில் அடுக்கிவைத்து தாஸ் தள்ளிக்கொண்டே வர தேவா சுற்றி முற்றி அவளை தேடிப் பார்த்தான். ஓரிடத்தில் திக்கு தெரியாமல் கண்கள் கலங்கியபடி பயந்துக் கொண்டு நின்றிருந்தவளிடம் சென்று நின்றான்