விமான நிலையம் வந்ததும் அங்கு விசாரித்தான் பிளைட் பற்றி அவர்கள் இன்னும் அரை மணி நேரம் கழித்து வருவதாக சொல்லவே அதற்குள் சாப்பிட இருவரும் ஓட்டலுக்குச் சென்றார்கள்.
சாப்பிட்டு முடித்து அவர்கள் வரும் போதே அறிவிப்பு கேட்கலாயிற்று.
அவர்களும் அமைதியாக இருக்கையில் அமர்ந்தனர். தாஸ் ஏதோ சைகை செய்ய
”வரட்டும் சரணை போலதான் அவளும் இருப்பாளாம் எதுக்கு போர்டு வேற இப்படியே பார்க்கலாம் விடு” என சொல்ல தாஸும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கலானான்.
அரை மணி நேரத்தில் பயணிகள் வர ஆரம்பித்தார்கள், தேவாவோ கூர்மையாக வருபவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். அந்நேரம் பிற விமானங்களும் வந்தபடியால் அதிலிருந்தும் பயணிகள் வந்துக்கொண்டிருந்தார்கள். கலந்து கலந்து பயணிகள் வந்தமையால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமானது.
அதில் தேவா கவனமாக பார்த்துக் கொண்டிருந்ததில் கண்டுபிடித்தான் அவளை. அழகாக இருந்தாள். சுடிதார் அணிந்திருந்தாள். பார்க்க சரண் போல அழகான முக அமைப்பு இருந்தாலும் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. ட்வின்ஸ் என்னை போல இருப்பாள் என்றானே அது நினைவு வரவே வந்தவளை பார்த்தபடியே அவளிடம் சென்றான்.
சரண்யாவோ அங்கும் இங்கும் பார்த்தபடி ஒரு வித குழப்பத்துடன் வந்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தை பார்த்தான். அழகாக மாசு மருவில்லாமல் வெண்மையாக இருந்தது. கண்களில் சின்ன பயம், முகத்தில் ஏகப்பட்ட குழப்பம், நடையில் ஒரு தயக்கம், எதையோ யோசித்துக் கொண்டு யாரையோ எதிர்பார்த்தபடியே வந்தவள் எதிரே வந்த தேவாவை கவனியாமல் அவன் மீது மோதினாள். மோதியவள் சட்டென தன்னை சுதாரித்துக்கொண்டு தேவாவை பார்த்து சிரித்தவள் உடனே தன் சிரிப்பை மறைத்துவிட்டு அவனிடம்
”யோவ் என்னய்யா இப்படி வந்து மோதற” என கத்த அவனுக்கு வியப்பே வந்தது