”என்ன நீங்க வந்திருக்கீங்க மாமா வரலையா” என கேட்க அவனோ எதுக்கு என்பது போல் சைகை செய்ய அவளோ வெட்கப்பட அவனுக்கு பற்றிக் கொண்டு வந்து அவளை முறைக்க அவள் புரிந்துக் கொண்டு
”எனக்கு மாமாவை பிடிச்சிருக்கு அவரை பார்க்கனும் போல இருந்துச்சி. அதான் கேட்டேன்” என சொல்ல தாஸ் அதிர்ந்து
”இது வேணாம்” என சைகை செய்ய அவளோ
”சீ போ உனக்கு இதெல்லாம் புரியாது. நாளைக்கு காலையில அவர் எங்க இருப்பாரு” என கேட்க தாஸ்
கோயில் என்பது போல் கையால் சைகை செய்ய
”ஓகே அப்ப நான் நாளைக்கு மாமாவை பார்க்க கோயிலுக்கு வரேன் தாங்ஸ் தாஸ் குட்நைட்” என சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குள் ஓட தாஸ்க்கு மண்டை சூடானது. நடப்பது அனைத்தும் தவறு என புரிந்துக் கொண்டவன் வேகமாக தேவாவை தேடி வீட்டுக்குச் சென்றான். தேவாவோ கையில் பிரசாதத்துடன் வீட்டுக்குள் செல்ல அங்கு வாசலில் மர இருக்கையில் அமர்ந்திருந்த அவனது தாத்தா வைத்தியநாதன்
”என்னடா இது” என கேட்க
”கோயிலுக்கு போனேன் பிரசாதம் கொடுத்தாங்க இந்தாங்க தாத்தா உங்களுக்காகவே கொண்டு வந்தேன்” என தர
”இப்ப வேணாம்டா” என சொல்ல
”பக்கத்து வீட்டு தாமரைதான் இதை உங்க கிட்ட கொடுக்கச் சொல்லிக் கொடுத்தாங்க தாத்தா” என சொல்ல உடனே தாத்தாவின் முகம் மலர உடனே பிரசாத இலையை வாங்கி மெதுவாக சாப்பிடலானார்.