(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு குதூகலமாக வீடு நோக்கி வேகமாக நடந்தான்.

   

தாஸோ இருவரும் சொன்னதைக் கேட்டு குழம்பி தலையில் கையை வைத்துக் கொண்டே விக்ரமின் வீட்டைப் பார்க்க அங்கு வாசலில் விக்ரம் கீர்த்தனாவிடம் ஏதோ பேசிக் கொண்டு இளித்துக் கொண்டு இருப்பதும் அதற்கு கீர்த்தனா பதில் சொல்ல தயங்கி தயங்கி அக்கம் பக்கம் பார்த்து தடுமாறுவதும் ஒரு கட்டத்தில் அவனிடம் தான் கொண்டு வந்த பிரசாதத்தை கொடுத்துவிட்டு உள்ளே ஓடிவிடுவதையும் விக்ரம் அவளது ஓட்டத்தைக் கண்டு சிரிப்புடன் அந்த பிரசாதத்தை பவியிடம் தந்து விட்டு வெளியே துள்ளலுடன் வருவதையும் கண்டவன் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு வெளியே வந்த விக்ரமை பார்த்து என்ன என பார்வையால் கேட்க அவனோ உடலை நெளித்து வளைத்து கேவலமாக வழிந்து

   

”ஒண்ணுமில்ல தாஸ் சும்மா அது” என உளற அவனோ

   

”இது வேண்டாம் விலகிடு” என்பது போல சைகை செய்ய

   

”ஏன்டா” என பாவமாக கேட்க அதற்குள் பவி வரவும் அவளைக் கைகாட்டி சைகை செய்ய அவனோ

   

”ஓ புரியுது புரியுது தங்கச்சி இருக்கறப்ப நான் எதுக்கு முந்தனும்ங்கறியா நான் பவிக்கு கல்யாணம் முடிச்ச பின்னாடிதான் கல்யாணம் செஞ்சிக்குவேன்” என சொல்ல தாஸ் தலையில் அடித்துக் கொண்டான். மீண்டும் அவன் செய்த சைகையை தவறாகவே புரிந்துக் கொண்டவன்

   

”சரி சரி எனக்குப் புரியுது, வீட்டுக்கு வந்தவளை கஷ்டப்படுத்தக்கூடாது அதானே ஓகே, நான் சரியான நாள் பார்க்கறேன் அதுக்கு முன்னாடி தங்கச்சிக்கு மாப்பிள்ளை தேடறேன். அவளோட கல்யாணம் முடிஞ்சதும் என் மனசை நான் எனக்கு பிடிச்சவளுக்கு காட்டப்போறேன் சரிடா நீ போய் தூங்கு” என சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்றுவிட பவியோ தாஸிடம் வந்தாள்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.