(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“மீதின்னா லாரி ட்ரான்போரட்டா அதுல என்ன வேலை இருக்கும்”

   

“பெரிசா இல்லை கணக்கு வழக்குதான் அப்புறம் கொஞ்சம் சூப்பர்வைஸ் பண்ணனும்”

   

“பவி எம்பிஏ படிச்சவதான்”

   

”அவள் விளையாட்டுத்தனமா இருக்காளே”

   

”ஓ சரி அப்ப கன்ஸ்ட்ரக்ஷன்ல என்ன பிரச்சனை”

   

”இருக்கே நிறைய ஆர்டர் வருது. என் அப்பா போல நான் பில்டிங் கட்டிடங்கள்னு பெரிசு பெரிசா கட்றதில்லைன்னாலும் வீடுங்க கடைகள்னு கட்டறேனே. என்னோட கட்டுமானம் இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், யாரையும் கஷ்டப்படுத்தாம யாருக்கும் அலைச்சலோ டென்ஷனோ தராம குறிச்ச நேரத்தில தரமாக வீடு கடைன்னு கட்டி கொடுத்துடுவேன். 

   

கட்டுமான வேலைக்காகவே நான் ஒரு டீம் வைச்சிருக்கேன். அந்த டீம்ல இருக்கறவங்க ஒரு வீடோ கடையோ இரவும் பகலும் பார்க்காம கட்டுவாங்க, அது முடிஞ்சதும் 1 வாரம் லீவு கொடுத்துடுவேன். அப்புறம் அடுத்த கட்டுமானத்துக்கு இறங்குவாங்க. என்கிட்ட வேலை செய்றவங்களை நான் நல்லா பார்த்துக்கறதால அவங்க நான் சொல்றதை அப்படியே செய்வாங்க. நேரம், காலம், மழை, புயல்ன்னு வந்தா கூட குறிச்ச தேதியில வேலை முடிஞ்சிடும். என்கிட்ட ஒரு பொறுப்பு கொடுத்தா சரியா செய்வேன்னு இந்த ஊர்ல எல்லாருக்கும் தெரியும், நியாயமா பணம் வாங்கி கட்டறதால நிறைய ஆர்டர் வந்திருக்கு. அதை கவனிக்கனும், ப்ளான் வரையனும், எனக்கு நேரமே கிடைக்கறதில்லை என்ன செய்றது”

   

“ஓ அப்ப கன்ஸ்ட்ரகஷன் வேலைக்குத்தான் உங்களுக்கு ஆள் தேவையா“

   

“ஆமாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.