“எந்த மாதிரி ஆள் தேடறீங்க”
“நான் பார்க்கற பார்வையை வைச்சே புரிஞ்சிக்கறவங்க வேணும்” என அவளை தீர்க்கமாக பார்க்க அந்த பார்வையை பார்த்து ரசித்தவள்
”ஆனா அனுபவம் இல்லைன்னா என்ன செய்றது”
“நான் எல்லாம் கத்துக் கொடுக்கறேன். எனக்கு மட்டும் முன் அனுபவமா இருந்தது, நானா கத்துக்கலையா என்ன” என சொல்ல அவள் சிரித்தாள்
”நானும் படிச்சி முடிச்சிட்டு வேலை தேடினேன். எங்க போனாலும் முன் அனுபவம் இருக்கான்னு கேட்கறாங்க. சொல்லிக் கொடுக்க யாரும் இல்லையாம்” என அவள் பொய்யாக வருந்த அதைக்கேட்டு சிரித்த தேவாவோ அதற்கு பதில் சொல்லும் முன் தாஸ் முந்திக் கொண்டு அவள் முன் சைகை செய்தான்.
”ஓகே இவன் என்ன சொல்றான்னா நீ எதுக்காக எங்கெங்கோ போய் கஷ்டப்படற, நம்மகிட்ட வேலைக்கு வந்துடு உனக்கு அனுபவம் கிடைச்சதும் உனக்கு பிடிச்ச வேலைக்கு போய் சேர்ந்துடு. எவன் அனுபவம் கேட்டானோ அங்க போய் வேலைக்கு சேர்ந்துடுன்னு சொல்றான்” என தேவா சொல்ல கீர்த்தனாவிற்கு குதூகலமாகிப் போனது அதற்குள் வீடு வரவே
”அண்ணன்னா அண்ணன்தான் எனக்கு என்ன தேவையோ மத்தவங்களை விட அண்ணனுக்குதான் முதல்ல புரியும். தாங்ஸ்ணா” என தாஸிடம் சொல்லிவிட்டு உடனே வீட்டுக்குள் ஓடிவிட தாஸ் குழப்பமான முகத்துடன் தேவாவை பார்க்க தேவாவோ சிரித்துக் கொண்டே தாஸிடம்
”நண்பன்னா நீதான்டா என் உயிர் நண்பன், இதுவரைக்கும் என் பார்வையை வைச்சி என் தேவைகளை செஞ்சி முடிச்ச ஆனா இன்னிக்கு என் மனசுக்குள்ள இருக்கற தேவையை புரிஞ்சி செஞ்சி வைச்சப்பாரு. நன்றிடா நண்பா” என பெருமையாகச் சொல்லி அவனது