(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“எதுக்கு என்னை உட்கார வைச்ச, அதுக்கு பதில் சொல்லு”

   

“உனக்கும் இந்த நாதன் குரூப்புக்கும் என்ன சம்பந்தம், இந்த ஃபைல்ல உன்னைப் பத்தியும் உன் போஸ்ட்டைப் பத்தியும் இல்லையே, பின்ன எதுக்காக இங்க வந்த”

   

“உன்னை பிக்கப் பண்ணத்தான்”

   

“நாதன் குரூப்ஸ்ல உன்னோட வேலை என்ன” என கேட்க

   

”எங்க குடும்பத்தோட பிசினஸ் அது. என் அப்பா, சித்தப்பா, மாமா மூணு பேரும் சேர்ந்து பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் செய்றாங்க. அவங்களோடதுதான் நாதன் குரூப்ஸ்”

   

“அப்ப உங்களுக்கு வேலையில்லையா”

   

“நான் லாரி ட்ரான்ஸ்போர்ட் வைச்சிருக்கேன். ஒர்க்ஷாப் இருக்கு அப்புறம் நானும் கன்ஸ்டர்கஷன் கம்பெனி வைச்சிருக்கேன். என் பேர்ல தேவன் கன்ஸ்டர்கஷன்னு இருக்கும்.”

   

“அப்ப நீங்களும் பில்டிங் கட்டுவீங்களா”

   

“இல்லை பில்டிங் கட்டதான் அப்பாவும் சித்தப்பாவும் இருக்காங்களே அதனால நான் சின்ன சின்னதா வீடு கடைங்க அப்படி கட்டுவேன். அதுவே போதும் எனக்கு, நானே 3 தொழில் நடத்தறேன்.” 

   

“என்ன படிச்சிருக்கீங்க?”

   

“இன்ஜினியரிங்”

   

“ஓகே” என சொல்லியவன் மீண்டும் லாப்டேப் நோண்டவே கடுப்பானான் தேவா

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.