(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”என் அப்பா உங்க அப்பாவோட ப்ரெண்ட். உங்க அப்பாவுக்காகத்தான் நான் இங்க வந்தேன். புரியுதா” என சொல்ல தேவன் அமைதியானான். ஆனாலும் சின்ன பையன் தன்னையே அதிகாரம் செய்கிறானே என்ற கோபம் அவனிடம் இருக்க உட்காராமல் நின்றுக் கொண்டே அவனை முறைக்க சரணோ

   

”உட்காருங்கன்னு சொன்னேன்” என  அழுத்தமாக நிறுத்திச் சொல்ல

   

”தம்பி ஓவரா பண்ற தம்பி” என சொல்லிக் கொண்டே அமர்ந்தான்.

   

அவனோ மறுபடியும் லேப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். நேரம் போய்க் கொண்டேயிருந்தது. 1 மணி நேரம் கழித்து

   

சரண் தேவாவை பார்க்க அவனோ கோப விழிகளுடன் தன்னையே பார்ப்பதைக் கண்டு

   

”வாட்”

   

“1 மணி நேரம் ஆச்சி” என சொல்ல

   

”அவ்ளோதானே என்னோட மீட்டிங்க்காக பல பேர் பல மணி நேரம் காத்திருப்பாங்க தெரியுமா” என சொல்ல

   

”இவ்ளோ திமிர் வேணாம் தம்பி உடம்புக்கு ஆகாது. உன் நாட்ல வைச்சிக்க இங்க உன் பருப்பு வேகாது”

   

“வாட் பருப்பு”

   

“துவரம் பருப்பு”

   

”வாட்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.