(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

நினைக்கிறான். நீ தப்பா நினைக்கற. அவன் பார்த்த பார்வையை வைச்சி இப்படி விக்ரமை தப்பா பேசாத” என அதட்டிவிட்டு காரை ஓட்ட ஆரம்பிக்க தாஸ் தலையில் அடித்துக் கொண்டு இல்லை என பலமாக தலையாட்ட

   

”என்னடா” என தேவன் கேட்க மீண்டும் அவன் சைகை செய்யவும் அவனையும் ரோடையும் பார்த்துக் கொண்டே

   

”அந்த கீர்த்தனா என்னைப் பார்த்தாள் ஆனா, விக்ரம் அவளை பார்க்கறான், அந்த பவி என்னை பார்க்கறாள் ஆனா நான் கீர்த்தனாவைப் பார்க்கறேன் இதையா சொல்ற” என கேட்க அவன் ஆமாம் என சொல்லவே சிரித்தான் தேவநாதன்

   

”நீ சொன்னதுல பாதி உண்மை பாதி பொய் நான் கீர்த்தனாவை பார்த்தேன், அவள் என்னைப் பார்த்தாள் அதுதான் உண்மை விக்ரம் பவியை பத்தி நீ சொல்றது பொய்”

   

என சொல்ல தாஸ் நொந்து போய் அவனிடம் இறுதியாக ஏதோ சைகை செய்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்

   

”ஒரு நாள் உண்மை தெரியும் பாருங்கறியா சரி பார்க்கறேன் கண்டிப்பா பார்க்கறேன். அவள் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியலைன்னாலும் அவளா ஒரு நாள் உண்மையை சொல்வா பாரு” என சொல்ல தாஸ் தலையில் அடித்துக் கொண்டு ரோடை பார்க்கலானான்.

   

ஓட்டல் வரவும் காரை பார்க் செய்துவிட்டு தாஸும் தேவநாதனும் 1 மணிக்கு சரணை தேடி  ஓட்டலுக்குள் வந்தனர். 

   

ரிசப்ஷனில் தான் வந்திருப்பதாக சரணிடம் தெரிவிக்கும் படி சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமைதியாக அமர்ந்தான். பக்கத்தில் தாஸ் அமர்ந்து அவனிடம் என்ன இது என கண்களால் கேட்க அவனோ

   

”பொறுமையா இரு தாஸ், சின்ன பையன்தானே பார்த்துக்கலாம் எதுக்காக ரூமுக்கு வர சொன்னான்னு தெரியலை.” என சொல்லிக்கொண்டே இருந்த போது அவனது போனுக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.