மாமா லைனில் வர அவரிடம் பேசினான் தேவன்
”ஹலோ தேவா”
”சொல்லுங்க மாமா
“தேவா அந்த சரணை போய் பார்த்தியா”
“இப்பதான் வந்தேன் மாமா இனிமேதான் போகனும்”
“அவங்க கூட எத்தனை பேர் வந்திருக்காங்க”
“அவனும் கூட 2 பேரும்தான் நீங்க சொன்னது போலவே விசாரிச்சி கூட்டிட்டு வந்தேன், அந்த பையன் சரண் பேப்பர் காட்டினான் அதுல நாம அனுப்பின லெட்டர்பேடு அப்ளிகேஷன் இருக்கு பார்த்தேன் அவன் கூட 2 பாடிகார்டுங்க வந்திருக்காங்க ரெண்டு ரூம் எடுத்தாச்சி”
“சரி சரி அவங்களே போன் பண்ணுவாங்களான்னு தெரியலை எதுக்கும் நீ கொஞ்சம் போய் அந்த பையன்கிட்ட கேளுப்பா எப்ப மீட்டிங் வைக்கலாம்னு”
“அந்த பையன்கிட்ட பேசப் போனாலே செக்யூரிட்டிங்க குறுக்க வராங்க, அதோட நான் ஏன் பேசனும் இது அப்பாவோட வேலை உங்க வேலை நீங்க யாராவது இங்க வந்து பார்த்துக்குங்களேன்”
“இங்க ஒரு பிரச்சனை, கட்டிடம் கட்டற இடத்தில எதிர்பாராம ஒருத்தனுக்கு விபத்தாயிடுச்சி. நாங்க எல்லாரும் இங்க இருக்கோம் எங்களால வரமுடியாது அவங்க கிட்ட கேளு தேவா எப்படியாவது நமக்கு இந்த டீல் கிடைக்கனும்”
“சரிங்க மாமா நான் பேசிப் பார்க்கறேன் அதுக்கப்புறம் நீங்கதான் பேசனும்” என சொல்லிவிட்டு அமைதியாக பக்கத்தில் இருந்த புக்கை எடுத்து படிக்கலானான். ஓட்டலுக்கு வருவோர் போவோர் இவனை வேடிக்கை பார்க்க இவன் யாரையும் பாராமல் இருந்தான்.