(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 08 - சசிரேகா

  

வீட்டிற்குள் நடக்கும் நிகழ்ச்சியைக்கண்டு குழம்பியவன் சட்டென சரணை பார்க்க அவனோ தத்தளித்துக் கொண்டிருந்தான். சேதுப்பிள்ளையோ இப்படி ஒரு ஏற்பாடு செய்வார் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. தேவாவை போலவே தாஸும் பதட்டமாக அவனிடம் வந்து ஏதேதோ சைகை செய்ய

   

”புரியுதுடா எனக்கும் அதேதான், எப்படி இப்படி இல்லை இதை நிப்பாட்டியே ஆகனும் வா வா” என அவசரமாக சரணிடம் சென்று நின்றான். அவனைப் பார்த்து முறைத்தான்

   

”என்ன இது”

   

என கோபமாக கேட்க சரணோ பயந்துக் கொண்டே எழுந்து நின்று

   

”இல்லை அது வந்து”

   

“நீ யார்ன்னு எனக்குத் தெரியும் முதல் நாளே நான் கண்டுபிடிச்சிட்டேன் சரணும் நீதான் சரண்யாவும் நீதான்னு உன் கையை தொட்டப்பவே எனக்குத் தெரியும் இவ்ளோ நடந்தும் நீ உண்மையை மறைச்சிட்டு இங்க வந்து உட்கார்ந்து எங்க வீட்டு மானத்தை வாங்கறியா” என அவன் கத்த அங்கிருந்த அனைவரும் சிலையாக நின்றார்கள். சரணுக்கோ அதிர்ச்சியில் கண்கள் விரிந்து

   

”கண்டுபிடிச்சிட்டீங்களா”

   

“ஆமாம் பெரிய கொல்லிமலை ரகசியம் பாரு, நீ வந்த நாளே ஏர்போர்ட்லயே கண்டுபிடிச்சிட்டேன். ஏன் இப்படி ட்ராமா பண்ணிட்டு ஊரை ஏமாத்திட்டு அலையற, எவ்ளோ பெரிய குடும்பம் உன்னோட குடும்பம் தெரியுமா” என கேட்க

   

”அது வந்து”

   

“முதல்ல இந்த வேஷத்தை கலைச்சி முடி கல்யாணத்துக்கு ரெடியாயிட்டியாக்கும்” என கத்த

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.