(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

சொல்வீங்கள்ளல சரி இனி இதுக்கு மேல பேச எதுவும் இல்லை, ஏதோ இந்த வீட்ல எனக்கும் ஒரு உரிமை இருக்கு, பேரன்ங்கற உறவு இருக்குன்னு நினைச்சேன் இல்லை இல்லை இனிமே எனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, நான் போறேன் என்னிக்கு அதோ அந்த ஏமாத்துக்காரிக்காக என்னை விரட்டினீங்களோ அவளுக்காக இப்ப கூட என்னை திட்டறீங்களே, இனி இங்க ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன் 

   

நான் தனியா 3 தொழில் நடத்தறேன்னு எல்லாரும் பொறாமைபட்டு சொத்தை பிரிச்சி எனக்குன்னு எதுவும் தராம அவங்க அவங்க பிரிச்சிக்கிட்டீங்க என் சித்தப்பாவும், அப்பாவும் சொத்தை பாதியாக்கிட்டாங்க, இந்த வீடு எல்லாருக்கும் பொதுங்கறதால இதை பிரிக்கலை, சித்தப்பாவுக்கு ஒரே பையன் அதனால அவருக்கு அடுத்து அவரோட பங்கு மொத்தம் அவனுக்கு யாருக்கு சாமிநாதனுக்கு வந்துடும். அடுத்து எங்கப்பா என்னிக்குமே என்னை அவரோட பையனா பார்த்ததில்லை,

   

என்னவோ நான் பிறந்த பின்னாடிதான் நஷ்டம் வந்துச்சின்னு என்னை ஒதுக்கி வைச்சாரு. அடுத்து என் தம்பி சூர்யநாதன் வரவும் அவனை நல்லா பார்த்துக்கிட்டாங்க. எப்படியும் அவரோட சொத்தை தம்பிக்குதான் தருவாரு. அது எனக்குத் தெரியும் இருந்தாலும் இன்னிக்கு வரைக்கும் நான் எதுக்காகவாவது உங்க எல்லார்கிட்டயும் வந்து நின்னிருக்கேனா சொல்லுங்க, என்னை எல்லாரும் விலக்கி வைச்சித்தானே பார்த்தீங்க, அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன். அந்த தாராவுக்கு என் தம்பியை பேசி முடிச்சீங்க, அந்த மந்த்ரா அவள் சுவாமிநாதனை லவ் பண்ணிட்டு திரியறா, எப்படியும் அவனுக்குத்தான் அவளை கல்யாணம் பண்ணி வைக்கப்போறீங்க, அதனால நான் எனக்கான பொண்ணை தேடி கூட்டிட்டு வந்தேன். 

   

இந்த சரண்யாவுக்காக அவளை பத்திரமா ஒரு இடத்தில வைச்சிருக்கேன். இந்த வீட்ல இருக்கற எல்லாரும் எனக்கு துணையா இருந்திருந்தா நான் விரும்பின பொண்ணை யாரோ ஒருவர் வீட்ல தங்க வைச்சி பாதுக்காக்கற நிலைமை வந்திருக்குமா எனக்கு, எனக்கு துணையா இங்க யாருமே இல்லை. பாட்டியும் ஒரு வார்த்தை என்னைக் கேட்காம சரண்யாவுக்கும் எனக்கும் சம்பந்தம் பேசினாங்க, ஏன் அப்படி செய்யனும் சரி அப்புறம் உண்மை தெரிஞ்ச பின்னாடியாவது விட்டிருக்கனும், எதுக்கு இன்னிக்கு இப்படி ஒரு பங்கஷன் வைச்சி, நம்ம வீட்டு மானத்தை வாங்கனும், நான் சொல்லவா இப்ப கூட வீட்டு 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.