ஒருத்தியால நிறைய நஷ்டமாயிடுச்சி. இருந்தாலும் பரவாயில்லை உன்னை தேவா விரும்பாம போனது நல்லதா போச்சி. இல்லைன்னா நீ அவனை கல்யாணம் பண்ணி இன்னும் எத்தனை பேரை ஏமாத்தி எவ்ளோ வேலைகளை செஞ்சி எங்க குடும்ப மானத்தை வாங்கியிருப்பியோ” என சொல்லிவிட்டு பூபதியிடம்
”உன் பொண்ணை கொண்டாந்து விட்டுட்டேன் இனிமே நான் இங்க இருக்க விரும்பலை நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு கிளம்ப முனைய தாத்தாவோ
”இருப்பா உனக்கான நஷ்டத்துக்கு பணம் கொடுக்கறேன்”
“பணமா வேணாம்ங்க எங்க மானமே போச்சி, நீங்க கொடுக்கற பணத்தால அதை சரி கட்ட முடியுமா என்ன, உங்க பணத்தால உங்க பதவியையே காப்பாத்திக்க முடியலையே அப்புறம் அந்த பணம் எனக்கு எதுக்கு, அதை வைச்சி ஒழுங்கா உங்க பேத்தியை நல்லவிதமா வளர்க்கப்பாருங்க” என சொல்லிவிட்டு அவர் கோபமாக சென்றுவிட தாத்தாவின் பார்வை பாடிகார்டுகளிடம் சென்றது
”உங்களை நம்பி நான் இவளை விட்டேன். இவள் செய்றதை என்கிட்ட சொல்லாம ஏன் மறைச்சீங்க”
“இல்லை தாத்தா அவங்க மேல தப்பில்லை, நான்தான் எதையும் சொல்ல வேணாம்னு சொன்னேன்”
“இது தப்புதானே சரண்யா”
“தப்பாயிடுச்சி. சூழ்நிலைதான் காரணம்”
“அப்ப கூட நீ உன்னை காரணமா சொல்லமாட்ட, இப்பகூட நீ தப்பு செய்யலைன்னு சாதிக்கறியா, சரி இனிமே உனக்கு இங்க இடம் இல்லை கிளம்பு வெளிய போ” என அவளது தந்தை பூபதி சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தாள்
”அப்பா”
Next episode pls