செய்து அமர வைத்தார்கள்.
கைலாசமும் அவசரமாக சரண்யாவையும் அவளுடன் இருந்த 2 பாடிகார்டுகளையும் அழைத்துக் கொண்டு நேராக ஏர்போர்ட் சென்றவர் அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து சென்னை சென்று அவளை அவளது தாத்தா வீட்டில் விட்டார். அங்கு அவர் எதுவும் பேசவில்லையென்றாலும் அவர் கண் முன்பே பூபதி தன் மகளின் கன்னத்தில் பளார் என அறைவிட்டார்
”பூபதி என்ன செய்ற வேணாம் விடு சின்ன பொண்ணு விடு”
”இல்லை அவள் பண்ணது தப்பு, என்ன இருந்தாலும் இவ்ளோ சேட்டை கூடாது. இந்த ஏமாத்தற பழக்கத்தால என்னவெல்லாம் ஆச்சி தெரியுமா”
“என் வீட்டு மானம் போச்சி அவ்ளோதானே, விடுப்பா விடு அவள் தெரிஞ்சே செய்யலை, ஏதோ விளையாட்டுக்கு” என அவர் பேச பூபதியோ
”இவள் செஞ்ச காரியம் உன் ஊர்ல இருக்கறவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சி. நீ இங்க வர்றதுக்கு 10 நிமிஷம் முன்னாடி நம்மளை போல கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட்ல இருக்கறவங்க போன் பண்ணி கேவலமாக பேசறாங்க, என்ன உன் பொண்ணை வைச்சே பல டீல்களை முடிக்கற போலன்னு கிண்டல் பண்றாங்க, வெறும் இது மட்டும்தானா இல்ல பலான விசயங்களும் நடத்தறியான்னு கேட்கறாங்க, கஷ்டமாயிருக்கு எல்லாம் யாரால இவளாலதானே, அப்பா மனசுடைஞ்சிப் போயிட்டாரு. அவரு உருவாக்கின கமிட்டியில இருந்தே அவரை தலைவர் பதலியிலிருந்து தூக்கிட்டாங்க தெரியுமா” என சொல்ல சரண்யாக்கு ஷாக்கானது
”அப்பா என்ன சொல்றீங்க தாத்தாவை ஏன் தூக்கினாங்க நான் பண்ண தப்புக்கு என்னைத்தானே தூக்கனும்”
“உன்னை அவர்தானே வளர்த்தாரு. இப்படி உன்னை வளர்த்து நிறைய வேலைகளை முடிச்சிக்கிட்டதா பேசவும் உன் தாத்தாவே தானாவே ராஜினாமா பண்ணிட்டாரு போதுமா நீ செஞ்ச சின்ன தப்பால அங்க மதுரையிலும் மானம் போச்சி, இங்கயும் மானம் போச்சி
Next episode pls