(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

பொண்ணுங்கள பாரு அவங்க மானத்தை வாங்கிட்டியே, அவங்க அழறாங்க பாரு திருப்திதானே உனக்கு” என அவன் கத்த அவளும் பார்த்தாள் தாரா கோபமாக முறைத்தாலும் சோகமாக இருந்தாள் மந்த்ரா மட்டும் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருக்க தலையை தொங்க விட்டாள் சரண்யா

   

”ஊருக்குள்ள இப்பவே என்ன பேசறாங்க தெரியுமா, பணத்துக்காக யார் என்னன்னு கூட தெரியாம ஒரு பொண்ணுக்கு பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கறாங்கன்னு பேசறாங்க, எங்க மானத்தை வாங்கிட்டியே, நீ பரவாயில்லை எல்லாம் பண்ணிட்டு கிளம்பி உன் ஊருக்கு போயிடுவ, இந்த ஊர்ல எங்க மானம் போனது போனதுதானே நான் கிடைக்கலைன்னா இப்படியா பழிவாங்குவ, நீ என்னை பழிவாங்கனும்னா என்னை மட்டுமே கஷ்டப்படுத்தியிருக்கலாமே, எதுக்காக என் குடும்பத்தையும் பாவம் ஒண்ணும் தெரியாத அந்த  2 பொண்ணுங்களையும் அவமானப்படுத்திட்ட, இதுக்கு நீ என்னை சாகடிச்சிருக்கலாம் அதை விட்டுட்டு வேஷம் போட்டு பொய்யை சொல்லி உண்மையை மறைச்சி சே உன் தாத்தா, அப்பா மேல இருந்த மரியாதையே போச்சி. அம்மா இல்லாத பொண்ணாச்சேன்னு உன்னை செல்லமா வளர்த்ததுக்கு நீ காட்டற பலனை பார்த்தியா கிளம்பு கிளம்பு போ” என தேவா கத்த அவளுக்கு என்ன சொல்வதென தெரியாமல் தவித்தாள். அவள் பாட்டியிடம் சென்றாள்

   

”பாட்டி நான் வேணும்னே செய்யலை சரண்யாவை எல்லாரும் விரட்டவும் சரி இந்த ஹாஸ்டல் கட்டறதுக்காக சரணா இருக்கலாம்னு நினைச்சித்தான் நான் இங்க தங்கினேன். ஆனா இப்படி நடக்கும்னு எனக்குத் தெரியாது”

   

“ஏம்மா நேத்து நைட் உன்கிட்ட நான் விசயம் சொன்னேனே இந்த ஹாஸ்டல் கட்டற டீலிங்காக பெத்த பையன்கூட பார்க்காம தேவாவை விரட்டிட்டாங்க, அதனால சீக்கிரமா இந்த ஹாஸ்டலை கட்டிடுப்பா எனக்கு தேவா வேணும்னு கேட்டேன், நீ என்ன சொன்ன சரின்னு சொன்ன, உடனே நான் நாளைக்கு இந்த வீட்ல இருக்கற பொண்ணுங்களை பாரு உனக்கு பிடிச்சிருந்தா பேசி முடிக்கலாம்னு சொன்னேன், அப்பவாவது நான் சரண் இல்லை சரண்யான்னு சொல்லியிருந்தா 4 சுவத்தில பிரச்சனை முடிஞ்சிருக்கும், என்கிட்ட சரி சரின்னு தலையாட்டிட்டு இப்படி ஊர் முழுக்க எங்க முகத்தில கரியை பூசிட்டியே இது நியாயமா”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.