(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

உன்மேல நம்பிக்கையில்லை கிளம்பு உன்னை நான் நிஜமாவே பிளைட் ஏத்தி விட்டே போறேன் உன் அக்ரிமெண்ட் இந்தா” என அதை அப்படியே கிழித்து அவளின் கையில் கொடுத்தார்

   

”இல்லை, சாரி அங்கிள் நான் இதையெல்லாம்”

   

“போதும் எங்களுக்கும் திறமை இருக்கு, நாங்களும் நிறைய பில்டிங் கட்டினவங்கதான் அந்த காலேஜ் ஓனர் ஏதோ புதுமையை எதிர்ப்பார்க்கறானேன்னு நாங்க கொஞ்சம் அவசரப்பட்டு உன்னை கேட்டது தப்பா போச்சி. தேடியிருந்தா எங்க ஊர்லயே ஆளுங்க கிடைச்சிருப்பாங்க தப்பாச்சி. ஏதோ உன் அப்பா மேல இருந்த நம்பிக்கையில சரி நீ ப்ளான் வரைஞ்சி கொடுத்தாலும் மீதி பாதி வேலையை நாங்க செய்ய ஒத்துக்கிட்டோம், உனக்கு அந்த ப்ளான்க்காகவே பாதி தொகையை கொடுக்க சம்மதிச்சோம் அதான் நாங்க பண்ண தப்பு, உனக்கு எல்லாம் செய்ய செய்ய எங்களையே நீ ஏமாத்தறியா, இங்க உன் தங்கச்சின்னு சொல்லி நீயே நாடமாடி தங்கி என் பையன் மேல பழியை போட்டு கடைசியில உனக்காக அவனை நான் வீட்டை விட்டு விரட்டினேன். தெரியுமா”

   

“தெரியும் பாட்டி சொன்னாங்க”

   

“அப்ப கூட நீ நான் ஒரு பொண்ணுன்னு சொல்லலை எவ்ளோ அழுத்தக்காரியா நீ இருப்ப, இந்த வீட்டுக்கு நீ வந்தா அவ்ளோதான் தேவாவை நாங்க எல்லாரும் தப்பா நினைச்சிட்டோம் போதும் இனி கிளம்பு அந்த ஹாஸ்டல் பிரச்சனையை நாங்களே சரிபண்ணிக்கிறோம் கிளம்பும்மா” என கத்த அவளோ தேவாவை பார்க்க அவன் கோபமாக முறைக்கவும் அவனிடம் சென்றாள்

   

”நான் வேணும்னே எதுவும் செய்யலை”

   

“உண்மையை மறைக்கறது பொய் சொல்றதுக்கு சமானம், முதல் நாள் உன்னை நான் இந்த வீட்ல சரண்யாவா விட்டப்பவே நீ சொல்லியிருக்கனும், நானும் நீயும் லவ் பண்ணலை, நீ ஓடிவரலை, என் அப்பாதான் உன்னை இங்க தங்க வைச்சதா நீ சொல்லியிருக்கனும் ஆனா, அப்பவும் நீ உண்மையை மறைச்ச, இன்னிக்கு எங்க சொந்த பந்தம் முன்னாடி பொண்ணு பார்க்க ஆம்பளை பையன் போல ரெடியாகி வந்து உட்கார்ந்துட்ட அங்க பாரு, அந்த 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.