(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

மானம் போனது பெரிசில்லை உங்களுக்கு, வெளிய இருந்து ஒருத்தி வந்து உங்க எல்லாரையும் முட்டாளாக்கினது பெரிசில்லை. அவளால வரக்கூடிய அந்த ஹாஸ்டல் டீலிங்தான் உங்க எல்லாருக்கும் முக்கியம், பெத்த பையன் கூட தேவையில்லை அப்படித்தானே சரி இருந்துக்குங்க நான் கிளம்பறேன், இனிமே நான் தேவநாதன் கிடையாது தேவா மட்டும்தான் 

   

இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, அந்த சரண்யாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல நான் போறேன்” என தெளிவாக சொல்லிவிட்டு அவன் வேகமாக வீட்டை விட்டு செல்ல தாஸ் பின்னாடியே சென்றான். அவன் சென்றதும் பாட்டி நிலைகுலைந்து அமர்ந்து அழ ஆரம்பிக்க அவரை சமாதானம் செய்யக் கூட நினையாமல் தாத்தா

   

”அழு நல்லா அழு, அடுத்தவங்க மனசை நீ என்னிக்குமே புரிஞ்சிக்கிட்டதில்லை. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடியே நான் கெஞ்சிக் கேட்டேன் வேணாம் இந்த கல்யாணம் சம்மதிக்காதேன்னு ஆனா நீ கேட்டியா ஒத்துக்கிட்ட, இப்ப பாரு என்னாச்சின்னு உன்னால என்னையும் புரிஞ்சிக்க முடியலை, என் பேரனையும் புரிஞ்சிக்க முடியலை. நான் சரியில்லை நான் ஒழுங்கா நிர்வாகம் பண்றதில்லைன்னு, எல்லாத்தையும் நீ எடுத்துப் போட்டுக்கிட்டு பார்த்துக்கிட்ட சொத்து பிரிக்கறப்ப கூட நான் கெஞ்சிக் கேட்டேன்

   

தேவாவுக்கு இந்த வீட்டையாவது தரலாம்னு நீ கேட்கல, முடியாதுன்னு உன் புள்ளைகளுக்கு எழுதிவைச்ச, இப்ப தேவா கேட்டானே நூத்துல ஒரு வார்த்தை அதுக்கு பதில் சொல்ல முடிஞ்சதா உன்னால, சொல்லு யாரைப் பார்த்தாலும் உடனே அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு சொல்லிடுவேன்னு அலட்டிக்கிட்டியே, இதோ இங்க நிக்கறாளே சரண்யா, அவளை உன்னால கண்டுபிடிக்க முடிஞ்சதா, அவள் சொன்னதை நம்பி என் பேரனை வம்புல மாட்டிவிட்டு, அவனை அடிச்சி விரட்டி எல்லாமே உன் முன்னாடிதான் நடந்துச்சி. 

   

இப்ப கூட அவன் போறான் உன்னால அவனை தடுக்க முடியலை ஏன் அவனை நீதானே வளர்த்த, நீ வளர்த்தவனையே வீட்டைவிட்டு போக விட்டு வேடிக்கை பார்க்கலாமா சரி நீ இங்கயே இருந்து உன் பையன்களையே பார்த்துக்க, நான் என் தேவாகிட்ட போறேன்” என சொல்லி அவர் கிளம்ப எத்தனிக்க அனைவரும் சேர்ந்து அவரை அமுக்கி பேசி சமாதானம் 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.