(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 09 - சசிரேகா

  

கோவை

   

”சார் பொண்ணோட போட்டோ இல்லாம நான் எப்படி சொல்றது” என பிரின்சிபால் கேட்க

   

“அவள் பேரு கீர்த்தனா சார், அவ்ளோதான் எனக்குத் தெரியும், ஹாஸ்டல்ல தங்கிப்படிக்கறா கூட இருக்கறவ பேரு பவித்ரா” என தேவா சொல்ல அவரோ

   

”கீர்த்தனா பேர்ல 10 பேர் இருப்பாங்க, பவித்ரான்னு 20 பேராச்சும் இருப்பாங்க, அந்த பொண்ணோட அப்பா அம்மா பேர் இருந்தா சொல்லுங்க”

   

“அப்பா அம்மா இல்லைங்க கார்டியன்தான்” என சொல்ல

   

”அவங்க பேர் சொல்லுங்க”

   

“அது தெரியலையே”

   

“எதுவும் தெரியாம இங்க வந்து கேட்டா எப்படி” என கத்த தேவா குழம்பி பின் அமைதியானான். பக்கத்தில் அமர்ந்திருந்த செந்தாமரையோ பிரின்சிபாலிடம்

   

”ஐயா நீங்க சொல்றது சரிதான், அந்த பொண்ணு எங்க ஊருக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகலை எங்களோட பழகி, வீட்ல ஒரே பிரச்சனைங்கறதாலதான் அவளைப் பத்தி விசாரிக்கலை. கொஞ்சம் முயற்சி செய்யுங்களேன்” என சொல்ல தேவாவோ

   

”சார் அவள் தங்கயிருந்த ஹாஸ்டல் ரூம்மேட்தான் பவித்ரா, இதை வெச்சி கண்டுபிடிக்கலாமே சார்” என சொல்ல

   

”அதுக்கு நீங்க ஹாஸ்டலுக்கு போய் பாருங்க” என சொல்ல அவரிடம் நன்றி சொல்லிவிட்டு தேவாவும் தாமரையும் வெளியே வந்தார்கள். வண்டியிடம் நின்றிருந்த தாஸ் அவர்கள் வரவும் என்ன என கேட்க தேவாவும் நடந்ததைச் சொல்லி காரில் ஏறவும் மற்றவர்கள் ஏறியதும் விசாரித்துக் கொண்டே ஹாஸ்டலை தேடிப்பிடித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.