(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”போய் பார்க்கலாம்”

   

“இல்லை பேப்பர்ல உன்னை பத்தி நியூஸ் வந்திருக்கு, பேசாம நீ ஊருக்கு போறியா”

   

“எனக்கு கீர்த்தனா வேணும் வண்டியை கொடைக்கானலுக்கு விடு” என அதிகாரமாகச் சொல்ல அவனும் சிரித்தபடியே

   

”ஏன் உன் புருஷனோட சட்டத்திட்டம் தாங்க முடியலையா” என கேட்டுக்கொண்டே வண்டியை கொடைக்கானல் நோக்கி ஓட்டினான்

   

”எனக்கு அவரையே பிடிக்கலை இது வேறயா” என அவர் மனதில் நினைத்துக் கொண்டே இருந்தார்

   

மதுரை

   

இங்கு தாமரையில்லாமல் சுந்தரத்தால் எதுவுமே முடியவில்லை. டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கொண்டு வந்ததும் அவரது 3வது மருமகள் கீதாவே அனைத்து வேலைகளையும் செய்தார். வீட்டில் இருக்கும் சமையல் முதல் அவரை பார்த்துக்கொள்ளும் முழுப்பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்டார். துணைக்கு வசந்தனும் மித்ராவையும் வைத்துக் கொண்டார்.

   

வைத்தியநாதனுக்கோ நிம்மதியாக இருந்தது. தாமரையை நினைத்து சந்தோஷமாக தன் வேலைகளை செய்யலானானர். ஆனாலும் அவரிடம் பேச எண்ணி ஆசைக்கொண்டவர் தேவாவுக்கு போன் செய்தார்

   

”ஹலோ தாத்தா சொல்லுங்க”

   

“தாமரை எப்படியிருக்கா”

   

“அவளுக்கென்ன கார்லயே தூங்கறா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.