(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”என்ன ரெடியாயிருக்க போல”

   

“ஆமாம் கோயிலுக்கு போகனும்ல”

   

“ஓ போலாமே” என காபியை எடுத்துக் கொண்டு குடிக்க ஆரம்பித்தான்

   

”சரண்யாவும் கோயிலுக்கு போக ரெடியா காத்துக்கிட்டிருக்கா” என சொல்ல அவனுக்கு புரை ஏற இருமினான்

   

”என்ன சொல்ற நீ”

   

“ஆமாம்”

   

“நேத்து நான் பேசின பேச்சில இந்நேரம் சென்னையில இருப்பாள்ன்னு பார்த்தா போலயா அவள்” என தேவா கேட்க கீர்த்தனாவோ முறைத்தாள்

   

”முறைக்காத எங்க அவள்”

   

“சோபால”

   

என சொல்ல உடனே காபி டம்ளரை அவளிடம் தந்துவிட்டு வெளியே வந்தான். அங்கு சரண்யாவோ

   

”இன்னிக்கு எல்லாருக்கும் முன்னாடி நான்தான் சீக்கிரமா எழுந்து குளிச்சிட்டு ரெடியா இருக்கேன். தேவா என்னைத்தான் கோயிலுக்கு கூட்டிட்டு போவாரு இன்னிக்கு அவர் என்ன கேட்டாலும் சரி கேள்வி கேட்காம பதில் சொல்லனும் ஒருவேளை கேள்வி கேட்கற மாதிரியிருந்தா சிரிச்சிடனும் இல்லைன்னா பேசாம இருந்திடனும் அதான் நமக்கு நல்லது அப்பதான் அவருக்கும் என் மேல இருக்கிற கோபம் குறையும்” என நினைத்துக் கொண்டு பல முடிவுகளுடன் தெளிவாக இருந்தவளின் முன்பு வந்து நின்றான் தேவா. 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.