(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“இப்படியெல்லாம் செஞ்சா நான் மயங்கிட மாட்டேன் புரியுதா” என சொல்ல அவளோ

   

”ஆனா நான் மயங்கிட்டேனே” என மீண்டும் சட்டை பட்டனை போட்டு விட அவன் தடுக்காமல் அவளையே பார்த்தான். பெரிய அமைதி அவள் முகத்தில் தாண்டவமாடியது. கொஞ்சமாக அவள் முகம் வெட்கப்பட்டது தெரியவே அவனுக்கு ஒரு மாதிரியாகி

   

”நீ  போ நான் போட்டுக்கறேன்” என அவன் அமைதியாக சொல்லிவிட அவள் அவனது தோளை தடவினாள்

   

”என்னடி செய்ற விடு” என கையை தள்ளி விட இன்னொரு தோளை தடவினாள் அதில் அவனுக்கு கூச்சமே வர அவளை தள்ளியேவிட்டான்

   

”போதும் பைத்தியமா உனக்கு என்கிட்ட ஏன் இப்படி நடந்துக்கற”

   

“ஏன் பிடிக்கலையா?”

   

“பிடிக்கலை”

   

“அப்ப பிடிச்ச மாதிரி செய்றேன்” என அவனிம் வந்தவள் சற்றும் எதிர்பாராமல் அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ளவும் நிலை தடுமாறி கட்டிலில் விழ அவன் மீதே விழுந்தாள். அவளை தள்ளி பக்கத்தில் படுக்க வைத்துப் பார்த்தான் 

   

”சரண்யா என்ன இது எதுக்கு ஒரு மார்க்கமா நடந்துக்கற” என கேட்க அவளோ பதில் சொல்லாமல் அவனது கன்னத்தில் முத்தம் வைக்கவர அதை புரிந்துக் கொண்டு அவன் பளார் என அவள் கன்னத்தில் அறையவும் அவள் சிரித்தாள்

   

”வலிக்கலையா உனக்கு சிரிக்கற”

   

“இப்படியாவது உங்க கை என் மேல பட்டிச்சே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.