”சாரி தாமரை” என அவர் பக்கத்தில் அமர்ந்து கெஞ்சினான்
”இதப்பாரு நான் ஏதோ கோபத்தில அப்படி பேசிட்டேன் சாரி, இனி எப்பவும் அந்தாளை பத்தி பேசலை ப்ளீஸ் சாரி பாரு என்னை பாரு இப்படி உம்முன்னு இருக்காத” என அவன் பேச பேச தாமரையோ
“நான் என் வீட்டுக்கு போறேன்” என்றார்
”இரு இரு அப்படி சொல்லாத தப்பு என்னோடதுதான் சாரி மன்னிச்சிடு, நான் உன் கால்ல கூட விழறேன் பாரு” என சட்டென அவரது காலை பிடிக்க அவரோ உடனே எழுந்து நின்றார்
”நீ சொன்னதும் சரிதான் தேவா, பிடிக்காத பொண்ணோட வாழ கூடாதுன்னு நீ இருக்க ஆனா, நான் பிடிக்காத கல்யாணம்னாலும் புருஷன் பொண்டாட்டிங்கற உறவால அவர் கூட வாழ்ந்து 3 குழந்தைகளை பெத்துக்கிட்டேன். அதுவே தப்புதான் நான் நினைச்சிருந்தா கடைசி வரைக்கும் அவர் கிட்ட போகாம இருந்திருக்கனும் தப்பு பண்ணிட்டேன் பெரிய தப்பு தப்பு பண்ணிட்டேன். நான் தப்பு பண்ணிட்டு அவரை வெறுத்து ஒதுக்கினது என்னோட தப்புதான்,
இதுல உன் தாத்தாவும் தப்பு செஞ்சிருக்காரே என்னையே நினைச்சிட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவள் கூட வாழாம என்னையேவா நினைச்சிட்டு இருந்தாரு இல்லை அவரும் வாழ ஆரம்பிச்சாரு, குழந்தைகளை பெத்துக்கிட்டாரு. அப்படின்னா எங்க ரெண்டு பேர் மனசுலயும் காதலை தாண்டி இந்த கணவன் மனைவிங்கற உறவு மேல மதிப்பு இருந்திருக்குது அதான் உண்மை, நான் இங்க இருக்கறது தப்பு சுந்தரம் செஞ்சது தப்புன்னா நான் செஞ்சதும் தப்புதான், காதலுக்காக நான் எதையும் துணிஞ்சி செய்யலையே
இதோ சரண்யாவை எடுத்துக்க அவள் காதலுக்காக கஷ்டப்பட்டு ரெண்டாவது மனைவின்னாலும் சரின்னு உன் கை பிடிச்சா, கீர்த்தனாவை பாரு நீ இல்லைன்னாலும் விக்ரம் கூட வாழக்கூடாதுன்னு எல்லாரையும் விட்டுட்டு தனியா அநாதை ஆசிரமத்தில