(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“ஐயா உங்க பையனாச்சே திறமையில்லாமயா இருக்கும், என்னய்யா நடந்து வர்றீங்க மாட்டுவண்டியில வரலைங்களா”

   

“எதுக்கு? எல்லாம் பக்கத்திலதானே இருக்கு அப்படியே நடந்து போகலாம்னுதான் வா வா சேர்ந்தே போவோம்”

   

ஐயா உங்க முன்னாடி, நான் உங்க கூட இல்லைங்க, நான் வரலை நான் பின்னாடி வரேன்” என சொல்ல விஜயன் தன் மகனைப் பார்க்க அவ்வளவு நேரம் பள்ளிக்கூடமா என பயந்து ஓடியவன் சுந்தரம் வரவும் அவனுடன் விளையாடி சிரத்துக் கொண்டிருக்கவே

   

”இவங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டாங்க போல சரி சரி வைத்தி வா வா”

   

“அப்பா நான் சுந்தரத்தோட வரேன்”

   

“சரி வா போவோம் அவனும் பள்ளிக்கூடத்தில படிக்கத்தான் போறானாம்”

   

“அப்படியா அப்ப நானும் படிக்கறேன்”

   

“அப்படின்னா சந்தோஷம் வாப்பா சுந்தரம் நீ வா, நான் உன்னை படிக்க வைக்கிறேன் என் பையன்கூடவே நீ இருக்கனும் சரியா”

   

“சரிங்கய்யா” என சுந்தரமும் மரியாதையாக தன் தந்தையை போலவே பணிவாக பேச அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது

   

”மாணிக்கம் நீ போ நானே உன் பையனை பள்ளிக்கூடத்தில விடறேன் நீ போ”

   

“சரிங்கய்யா” என சொல்லியவர் தன் மகனிடம்

   

”சுந்தரம், ஐயாதான் நமக்கு சாமி அவர் புள்ளையை நீதான் பார்த்துக்கனும் சரியா அவருக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.