(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

சாமி படம் போட்ட டாலரை கயிறில் கட்டியிருந்தாள். 

   

நெற்றியில் கருப்பு பொட்டு திருஷ்டிக்காக கன்னத்திலும் கருப்பு பொட்டு மையால் வைத்திருந்தார்கள். அவளது அப்பா அவளை அழைத்து வந்திருந்தார் வரும் போதே ஒரே அழுகை

   

”நான் போ மாட்டேன் ஆஆஆ நான் வரலை” என அவள் கைகளை கால்களை உதறி அழுத வண்ணமே வகுப்புக்குள் தன் தந்தையால் கட்டாயமாக தூக்கி வரப்படாள்.

   

வைத்தியின் நிலத்தில் வேலை செய்யும் மணியின் மகள் செந்தாமரை. அந்த பள்ளி வைத்தியின் தந்தைக்கு தந்தை கட்டினார். சாதி மத பேதம் இன்றியும் ஏழை பணக்காரன் வேறுபாடும் இன்றியும் அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கும்படி அந்த பள்ளிக்கூடம் கட்டினார். 

   

அதன் காரணமாக வைத்தி பணக்காரன் என்றால் மற்ற பிள்ளைகள் அதற்கேற்ப விவசாயியின் குழந்தைகளாகவும் மற்ற வேலை தொழில் செய்பவர்களின் குழந்தைகளாகவும் இருந்தார்கள். செந்தாமரையும் அப்படியே, ஏழையாக இருந்தாலும் அப்படியொரு அழகு அவளை வைத்தே பெயர் சூட்டியிருந்தார்கள். 

   

அந்த ஊரில் அவளை விட அழகி யாரும் இல்லை குழந்தை என்பதால் இன்னும் அழகாக குட்டியாக கொழு கொழுவென இருந்தாள். இதில் அழுததால் கண்மை கரைந்து கன்னம் முழுவதும் பட்டு கண்ணீருடன் இருந்தாள். அதில் அவள் தேவதை போலவே வைத்திக்கு தெரிந்தாள். அழும் குழந்தையைக் கண்டதும்

   

”அண்ணா பாப்பா ஏன் அழுது” என துணிந்து கேட்டான் வைத்தி, அங்கு வாத்தியார் இருந்தாலும் அவர் கேட்பதற்குள் இவன் முந்திக் கொண்டான்

   

”சின்னய்யா அது பாப்பாவுக்கு இங்க படிக்க பிடிக்கலையாம் அதான்”

   

“அப்படியா எங்க அவளை என்கிட்ட விடு நான் பார்த்துக்கறேன் நீ போ” என சொல்ல அவனும் வாத்தியாரிடம் குழந்தையை காட்டிவிட்டு அவர் சரியென தலையாட்டியதும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.