வாங்குவான். வைத்தி எதைச் சொன்னாலும் அப்படியே நம்பி அவன் சொன்னதை செய்பவள் சுந்தரம் எதை சொன்னாலும் அதை காதிலே போடுவதில்லை, அது அவனுக்கு சங்கடத்தை அளித்தது.
வகுப்புகள் ஏற ஏற கணக்கு பாடம் தவிர மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தார்கள் வைத்தியும் தாமரையும். சுந்தரம் வழக்கம் போல் அனைத்து பாடங்களிலும் அவனே முதல் மதிப்பெண். அவனது படிப்பு, அவனது திறமையைக் கண்டு விஜயனும் அவனுக்கு படிக்க உதவி செய்தார்
”நல்லா படிக்கற இப்ப எத்தனாவது படிக்கற” என விஜயன் தன் வீட்டின் முன்னாடி இருக்கையில் அமர்ந்துக் கொண்டு எதிரே இருந்த மூவரையும் நிற்க வைத்து அதில் சுந்தரத்தைப் பார்த்துக் கேட்டார்
”ஐயா 7வது வகுப்புங்க”
“நல்லது நீ கவலைப்படாத நான் இருக்கேன், பெரிய படிப்பு கூட நீ படி அதுக்கான செலவு முழுக்க நான் செய்றேன் சரியா”
“சரிங்கய்யா”
“என்ன படிக்க ஆசைப்படற”
“பெரிய படிப்புங்கய்யா”
“அதான் என்ன படிப்பு டாக்டரா இல்லை கலெக்டரா”
“டாக்டர்ங்கய்யா”
“பெரிய படிப்புதான் அதுக்கு நிறைய செலவாகுமே சரி சரி, நான் பணம் தரேன் ஆனா ஒழுங்கா படிச்சி இதே ஊர்ல ஆஸ்பிட்டல் கட்டி இங்க இருக்கற மக்களுக்கு நீ வைத்தியம் பார்க்கனும் செய்வியா”