(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“செய்றேங்கய்யா”

   

“சத்தியம் செய், வேற எந்த ஊருக்கும் போக மாட்டேன்னும் சாகற வரைக்கும் இந்த ஊருக்குதான் விசுவாசமா நடந்துக்குவேன்னு சொல்லு” என சொல்ல அவனும் அதே போல சொல்லி சத்தியம் செய்தான்

   

”வார்த்தை மறந்துடக்கூடாது பசுமரத்தாணி போல மனசுக்குள்ள பத்திரமா வைச்சிக்கனும் சரியா” என சொல்ல அவனும் சரி என தலையாட்டியதும் அடுத்து வைத்தியை பார்த்தார்

   

”நீ என்னடா ஆகப் போற”

   

“நானும் உங்களை போல பெரிய பணக்காரனா ஆகப்போறேன்” என சொல்ல அவருக்கு அது பெருமையாக இருந்தது. தன் மீசையை நீவி விட்டுக் கொண்டு

   

”நீயும் சுந்தரத்தை போலவே டாக்டராயிடேன்”

   

“எதுக்குப்பா ஒரு ஊருக்கு ஒருத்தன் போதும் அதான் சுந்தரம் இருக்கானே, நான் வந்தா அவனுக்கு போட்டியா இருக்கும் அவனே இருக்கட்டும்” என சொல்ல அந்த வயதில் தன் மகனுக்கு இருக்கும் நல்ல குணத்தை நினைத்து பெருமைப்பட்டார் விஜயன்

   

”சபாஷ் இப்படித்தான் இருக்கனும் உன் நல்ல குணத்துக்கு நல்லதே நடக்கும், எனக்கு அடுத்து நீதானே இது எல்லாத்துக்கும் ஒரே வாரிசு அனுபவி” என சொல்ல அவனும் சரியென்றான்.

   

அடுத்து தாமரையை பார்த்தார். நன்றாக வளர்ந்து பாவாடை சட்டையில் இருந்தாள் அவளின் அழகு இன்னும் மெருகேறியிருந்தது

   

”இந்த ஊர்லயே உன்னை விட அழகி யாரும் இல்லை எப்படி படிக்கற”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.