வைத்தி. அதைப்பார்க்க பார்க்க வெறுப்பே வந்தது சுந்தரத்துக்கு அவன் பாக்கெட்டில் 10 பைசா கூட இல்லை ஆனாலும் வைத்தி சொன்னதால் சுர்ரென கோபம் மட்டும் எழுந்தது. அதிலும் அழகான தாமரை தன் கன்னத்தில் அறைந்து விட்டாளே என்ற ஆத்திரம், கோபம் அவன் மனதில் ஒரு கோபத்தீயை உண்டாக்கியது.
அன்று முதல் வைத்தியும் தாமரையும் இணைந்தே பள்ளிக்குச் சென்றார்கள் வந்தார்கள். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அவர்கள் நடந்து செல்வதைப் பார்க்க பார்க்க சுந்தரத்துக்கு கோபம் வரும், அவனும் அவளது இன்னொரு கையை பிடிக்க அவளோ அதை தட்டிவிட்டு நடப்பாள்.
வருடங்கள் ஓடியது
வைத்தியோ நன்றாக வளர்ந்ததும் தன் தந்தையிடம் சொல்லி சைக்கிள் வாங்கி அவளை பின்பக்கமா உட்காரவைத்து ஓட்டலானான். நடந்து செல்லும் சுந்தரம் சைக்கிள் வாங்க கூட முடியாத நிலையில் இருந்தான், வைத்தியும் தாமரையும் ஜோடியாக சைக்கிளில் செல்வதைக்கண்டு பொறுமினான். அந்த வகுப்பில் வேறு மாணவிகள் இருந்தாலும் அவர்களிடம் வைத்தி செல்வதில்லை.
அதே போல நண்பன் என்றால் அது சுந்தரம்தான் வேறு யாரையும் அவன் சேர்ப்பதில்லை. அந்த ஒரு குணம் சுந்தரத்திற்கு மிகவும் பிடிக்கும் தாமரையை ஒதுக்கிவிட்டால் வைத்தி சுந்தரத்துடன் மிகவும் நட்பாகவே பழகினான். அவனுக்கும் தேவையானதை வாங்கிக் கொடுத்தான். என்ன ஒரே விசயம் தாமரையை மட்டும் யாரிடமும் முக்கியமாக சுந்தரத்திடம் விடாமல் தானே பார்த்துக் கொண்டான்.
நாட்கள் வேகமாக ஓடியது. வருடங்கள் ஓடியது. 3 பேரும் அடுத்தடுத்த வகுப்பிற்கு முன்னேறினார்கள். ஒற்றுமையாகவே இருந்தார்கள். படிப்பிலும் 3 பேரும் படு சுட்டி அதிலும் சுந்தரம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தான். அடுத்த இடத்தில் வைத்தி அதற்கு அடுத்த இடத்தில் தாமரை வந்தாள்.
யார் முதல் யார் ரெண்டாவது என்ற பேதம் வைத்திக்கு இல்லை ஆனால் சுந்தரம் மட்டும் நான்தான் முதல் என்ற கர்வத்தில் அடிக்கடி தாமரையிடம் பேசி அவளிடம் திட்டு