(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

விளையாட்டுக்கு சொல்றான் சரியா பதட்டப்படாத நான் இருக்கேன், உன் பொண்ணை அழைச்சிட்டு போ” என சொல்ல அவரும் தலையாட்டிவிட்டு தாமரையை பிடிக்க வைத்தியோ

   

”கொஞ்ச நேரம் நாங்க மூணு பேரும் விளையாடறோம் அப்புறம் நானே அவளை கூட்டிட்டு போய் வீட்ல விட்டுறேன்ப்பா” என சொல்ல அதற்கு விஜயனும் சரியென்றார்

   

”தெருவில விளையாடாம இங்க தோட்டத்திலயே விளையாடுங்க” என சொல்ல அவர்களும் அப்படியே விளையாடினார்கள்.

   

விளையாட்டிலும் தாமரை வைத்தி கூடவே இருந்தது சுந்தரத்துக்கு ஏமாற்றமாகி விட்டது. அவனோ விளையாட்டை பாதியில் விட்டு படிக்க அமர அதைப்பார்த்த இருவரும் தாங்களும் படிக்க அமர்ந்தார்கள்

   

”இந்த கணக்கே வரலை” என தாமரை அலுத்துக் கொள்ள வைத்தியோ

   

”எனக்கும்தான் கணக்குபாடம் வரலை, இப்ப என்ன செய்றது” என புலம்ப சுந்தரமோ அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு

   

”நான் சொல்லித்தரேன்” என சொல்ல இருவரும் சரியென தலையாட்டி அன்று முதல் கணக்கு பாடத்திற்கு அவனிடம் செல்ல அவனும் ட்யூசன் எடுத்தான்.  அதைப்பார்த்த விஜயனும் எப்படியோ நன்றாக படித்தால் போதும் என அமைதியானார்.

   

அடுத்து வந்த வருடங்களில் இதேதான் நடந்தது. தாமரையை தன்னிடம் வரவழைக்க ட்யூசன்தான் சரியானது என நினைத்த சுந்தரமும்  எந்நேரமும் பாடம் சொல்லித்தருகிறேன் என அவளை விடாப்பிடியாக தன்னுடன் அமர வைத்துக் கொண்டான். வைத்தியும் அதைக்கண்டு எதுவும் சொல்லவில்லை, காரணம் படிப்பை தவிர மற்ற நேரங்களில் தாமரை தன்னிடமே இருப்பது அவனுக்கு வலிமையை தந்தது. அவளும் வைத்தியுடன் நன்றாக பழகிவிட்டாள் நீயில்லாமல் நான் இல்லை என்பது போல அவர்களது உறவு ஒரு வித பிணைப்பில் பிணைந்திருந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.