”இல்லை சுந்தரம் நல்லாப் பாரு எவ்ளோ அழகாயிருக்கா, இந்த உடுப்புல வித்தியாசமா இருக்கா, நான் தொடறப்ப இதுக்கு முன்னாடி அவள் இப்படி கூச்சப்பட்டதில்லை இப்ப இவள் கூச்சப்படறது கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எப்படியும் இதுக்கப்புறம் இவளை பார்க்க முடியாது அதான் முழுசா பார்த்து என் மனசுல பதிய வைச்சிக்கறேன்” என சொல்ல சுந்தரமோ வாய் வைத்துக் கொண்டு சும்மாயில்லாமல்
”ஏன் பேசாம ஜோடியா போட்டோ புடிச்சி வைச்சிக்க” என சொல்ல வைத்தியின் முகம் உடனே மலர்ந்து
”ஆமாம் அதை நான் மறந்துட்டேன் பாரேன்” என சொல்லி தாமரையின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு திருவிழாவிற்கு வந்திருந்த போட்டோ ஸ்டுடியோவிற்கு சென்றான்.
உள்ளே இருந்த ஆளிடம்
”அண்ணா என்னையும் இவளையும் சேர்த்து வைச்சி போட்டோ புடிச்சி தான்னா”
”யார்டா இந்த பொண்ணு”
“நான் கட்டிக்கப் போற பொண்ணு”
“ஓ சரி சரி அப்படி நில்லு நில்லு இப்படி வா” என இருவரையும் நிற்க வைத்து போட்டோ எடுக்க அதைப்பார்த்த சுந்தரமோ என்ன செய்வது என புரியாமல் தானும் அங்கு சென்று நிற்க முயல வைத்தியோ
”சுந்தரம் நீ தள்ளி நில்லு, தாமரை எனக்குத்தான் அவள் பக்கம் நீ வராத நாம ரெண்டு பேரும் அப்புறமா போட்டோ புடிச்சிக்கலாம்”
“ஏன் நான் தாமரை கூட போட்டோ புடிக்க கூடாதா அவளும் எனக்குத்தானே” என சொல்ல வியந்தான் வைத்தி தாமரையோ