”ஏன்பா பிரிக்கறீங்க அவள் என்கூடவே இருக்கட்டுமே” என சொல்ல அதிர்ந்தார் விஜயன்
”அது தப்பு அவள் வயசு பொண்ணு அவளை விடு நேரமாகுதுல்ல அவள் வீட்டுக்குப் போகட்டும் விடு அவளை” என சொல்ல அப்போது அவளை விட்டான். மணியும் பெரிய கும்பிடு போட்டு தாமரையை அழைத்துக்கொண்டு செல்ல விஜயனோ போட்டோ கிராபரிடம்
”ஒரு படம் கூட வெளிய போக கூடாது எரிச்சிடு” என சொல்ல வைத்தி கத்தினான்
”அப்பா ஏன்ப்பா”
“அமைதியா இரு வா என்கூட”
“அப்பா ஒரே ஒரு போட்டோப்பா”
“வேணாம் வைத்தி இப்ப எதுக்கு இப்படி செய்ற”
“அப்பா எனக்கு அவள் வேணும், நான் அவளை கல்யாணம் பண்ண்ணிக்கறேன்”
“நீ என்ன அவளை காதல் பண்றியா”
“காதலா அப்படின்னா” என கேட்க
”அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்ற, ஆனா காதலான்னு கேட்டா தெரியலைங்கற இன்னும் உனக்கு பக்குவம் வரலை. அமைதியா இரு, முதல்ல படிப்பை முடி அப்புறம்தான் கல்யாணம்” என சொல்லி அவனை அழைத்துச் செல்ல எதிர்ப்பட்டான் சுந்தரம்
”நல்லவேளை சுந்தரம் நீ வந்து சொன்னதால ஆச்சி இல்லைன்னா ஊருக்குள்ள என்