பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தா ஊரும் தப்பா பேசாது, நீங்களும் நிம்மதியா இருக்கலாம் எனக்கு சீர் வரதட்சணை எதுவும் வேணாம், தாமரை மட்டும் போதும் நான் அவளை மகாராணி போல பார்த்துக்குவேன்” என அவன் பேச பேச மணியின் மனம் கரைந்தது
”சரிப்பா சரி நல்ல நாள் பார்த்து கல்யாணத்தை முடிக்கலாம்”
“நானே நல்ல நாள் பார்த்துட்டேன் அடுத்த வாரமே இருக்கு”
“என்னப்பா இது உன் வீட்ல கேட்காம எப்படி”
“எல்லாம் நான் பேசிட்டேன். நீங்க சரின்னு சொன்னா போதும்” என சொல்ல அவரும் சரியென சொல்லவே வீட்டிற்குள் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த தாமரைக்கு கஷ்டமாகிப் போனது. சுந்தரமோ
”நன்றிங்கய்யா” என பணிவாக பேச அவருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது
”என்னப்பா நீங்களே டாக்டர் என்கிட்ட போய் இப்படி பணிவா பேசலாமா”
“நான் உங்க வீட்டு மருமகன், நீங்க எனக்கு மாமா நான் அப்படித்தான் பார்க்கறேன்” என சொல்ல அவரும் அவனை மெச்சிக்கொண்டார்
”மாமா ரொம்ப வருஷம் ஆச்சி, தாமரையை பார்த்து ஒரு முறை அவளை காட்டறீங்களா போதும் அதுக்கப்புறம் நான் கேட்கலை” என சொல்ல அவரோ
”என்னப்பா நீ இந்த வீட்டு மாப்பிள்ளை, அவளை கல்யாணம் பண்ணிக்க போறவன் நீ பார்க்காமயா இரு கூப்பிடறேன்”
“தாமரை தாமரை இங்க வா யார் வந்திருக்கான்னு பாரு வாம்மா டாக்டர் மாப்பிள்ளை வந்திருக்காரு வாம்மா” என அழைக்க அவளோ வெளியே வராமல் இருக்கவே சுந்தரமோ தைரியமாக அந்த சிறிய வீட்டுக்குள் ஒரு பக்கமாக இருந்த அறைக்குள் செல்ல அங்கு