”எனக்கு நீ வேணாம் எனக்கு வைத்திதான் வேணும், நீ தள்ளி நில்லு” என அவனை தள்ளிவிடவும் அவமானத்தில் முகம் சிவந்த சுந்தரமோ அங்கிருந்து வெளியேறினான். அவன் சென்ற பின்பும் வைத்தி கவலைப்படாமல் இன்னும் 3 4 போட்டோக்களை எடுத்துக் கொண்டு நிற்பதற்குள் தாமரையின் தந்தை மணி வந்தார் அங்கு தாமரையிடம்
”என்ன செய்ற இங்க”
“போட்டோ புடிக்க வந்தேன்பா” என சொல்ல அவரோ அவளை அடிக்கவும் வைத்தி தடுத்தான்
”சின்னய்யா இது தப்பு இப்படி நீங்க போட்டோ புடிக்கறது தெரிஞ்சா, நாலு பேர் தப்பா பேசுவாங்க இதோட விடுங்க” என சொல்வதற்குள் விஜயன் வந்தார்
”என்னாச்சி மணி”
“ஐயா சின்னய்யா தாமரையோட போட்டோ புடிச்சிக்கிட்டிருந்தாருங்க அது தப்புன்னு சொன்னேன். இந்த விசயம் ஊருக்குள்ள தெரிஞ்சா என்னாகும் அதான்” என சொல்ல விஜயனோ வைத்தியை பார்க்க தாமரையின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு துணிச்சலாக நின்றுக் கொண்டிருந்தவனைக் கண்டு சிரித்தவர்
”இப்பவே என்னடா போட்டோ உனக்கு”
“இல்லைப்பா அவளை பள்ளிக்கூடத்துக்கு வரவிடலை, பார்க்க முடியலை அதான் போட்டோ புடிச்சி வைச்சிக்கலாம்னு”
“சரி சரி அவளை விடு இனிமேல இப்படி போட்டோ புடிக்க கூடாது சரியா”
“சரிப்பா” என சொல்லியும் அவன் கையை விடாமல் இருப்பதைக் கண்டவர் தானே அவர்களை பிரிக்க முயல தடுத்தான் வைத்தி