மானமே போயிருக்கும் நல்ல பையன் நீ” என சொல்லவும் வைத்தி சுந்தரத்தை கோபமாக முறைத்தான். அதைப்பற்றி சுந்தரம் கவலையேப்படவில்லை அந்நேரம் தான் ஜெயித்ததாகவே நினைத்தான் சுந்தரம்.
அதன் பிறகு தாமரையை வீட்டிலேயே அடைத்துவிட்டார் அவளது தந்தை மணி. சாதாரண குடிசை வீடு, பின்பக்கம் கிணறு இருக்கும். அவளை பார்ப்பதற்க்காகவே வைத்தி அவ்வப் போது அந்த கிணற்றுபக்கம் செல்வதுண்டு, சில சமயம் அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் சில சமயம் கிடைக்காது.
ஆனாலும் அவன் முயற்சியை கைவிடவில்லை. அன்று போட்டோ ஸ்டூடியோவில் நடந்த பிரச்சனைக்குப் பிறகு வைத்தி சுந்தரத்தை அடியோடு ஒதுக்கிவிட்டான். பள்ளிக்கூடத்திலும் இருவரும் பேசிக் கொள்வதில்லை. அதனால் சுந்தரத்திற்கு இன்னும் சந்தோஷமாகிப் போனது. அவனும் ஏழை விவசாயியின் மகன் என்பதால் அடிக்கடி மணியிடம் சென்று நல்ல பேரை சம்பாதிக்க ஆரம்பித்தான்.
போட்டோ எடுத்த விசயம் அரசல் புரசலாக ஊருக்குள் பரவினாலும் அதை வதந்தி என விஜயன் சொல்லியதால் அதோடு மக்கள் அதை பற்றி பேசுவதை விட்டார்கள். ஆனாலும் சிலர் மணியிடம் மட்டும் அதைப் பற்றி கேலி பேசினார்கள்
”அழகா பொண்ணை பெத்தது நல்ல விசயமால்ல இருக்கு பாரு, சோறு போடற முதலாளி குடும்பத்துக்கே பொண்ணை கொடுத்துடுவாப்ல நமக்கு இந்த மாதிரி வாய்க்கலையே” என ஒருவர் சொல்ல மற்றவர்
”தாமரையோ ஏழைப் பொண்ணு, அந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு போனாலும் மரியாதையாவா நடத்துவாங்க வேலைக்காரியாதான் பார்ப்பாங்க”
”ஏதோ சின்னய்யா ஆசைப்பட்டதால தாமரையை கட்டி வைச்சாலும் அதுக்கப்புறம் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்காமயா போவாங்க, எல்லா வீட்லயும் நடக்கறதுத்தானே இது பாவம் தாமரை பெரிய இடத்தில வாக்கப்படறோம்னு சந்தோஷத்தில இருக்கா போல, அதுக்கு தெரியாது எப்படியாப்பட்ட வாழ்க்கை அமையும்னு, முதலாளி நிலத்தில வேலை செய்றவரோட பொண்ணு எப்படி