(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

புடவையில் இருந்தாள் தாமரை. 

   

இன்னும் அழகாக வாளிப்பாக அவள் இருக்க அவளைக் கண்டதும் பித்தம் தலைக்கேறிய சுந்தரமோ இவளை விடவே கூடாது என நினைத்துக் கொண்டு அங்கிருந்து தன் வீட்டிற்குச் சென்றான். அவன் சென்றதும் வழக்கம் போல் மணியில்லாத நேரமாக வந்த வைத்தியிடம் சுந்தரம் வந்தது, பேசியது, அடுத்த வாரம் கல்யாணம் வரை நடந்தது அனைத்தும் சொல்ல வைத்திக்கு கோபமே வந்தது

   

”நீ கவலைப்படாத நான் இருக்கேன்ல அது எப்படி அவனுக்கு முன்னாடி உனக்கு எனக்கும் பேசியாச்சி, நான் அப்பாட்ட பேசிக்கிறேன் நீ அமைதியா இரு” என சொல்லிவிட்டு அவன் தந்தையிடம் சொல்ல அவரோ கோபத்துடன் மணியை கூப்பிட்டு விசாரிக்க

   

”என்னய்யா இது நான்தானே தாமரையை என் பையனுக்கு பேசி முடிச்சேன், இப்ப வேற ஒருத்தனுக்கு பேசினா என்ன அர்த்தம் என் மானத்தை வாங்கறியா நீ” என கத்த மணியோ துணிச்சலாக

   

”ஐயா உங்க பையனை விட டாக்டர் மாப்பிள்ளை எனக்கு கிடைச்சாரு, அதோடு உங்க வீட்டுக்கு என் பொண்ணு வந்தா அவளை சாதராணமாதான் நீங்க பார்ப்பீங்க, காரணம் உங்ககிட்ட வேலை செய்றவனோட பொண்ணுன்னு இளக்காரமா நினைப்பீங்க அதே டாக்டர் மாப்பிள்ளைன்னா அவளை மகாராணி போல பார்த்துக்குவாரு அதனாலதான் அவருக்கு நான் பேசி முடிச்சேன். வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம் நீங்க அவசியம் வரனும்ங்க” என சொல்ல விஜயனுக்கு கோபமே வந்தது 

   

”என்னய்யா இது விளையாட்டா போச்சா, நீ என் முதுகுல குத்தறியா இனி உனக்கு வேலையில்லை”

   

“நல்லதுங்கய்யா நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட வைத்தியோ தந்தையிடம்

   

”அப்பா எனக்கு அவள் வேணும்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.