ஆனா இப்ப நான் அவளை காதலிக்கிறேன், அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்” என சொல்ல அவரோ
”அவள் சாதாரண வீட்டு பொண்ணு, நம்ம நிலத்தில வேலை செய்றவரோட பொண்ணு, நீ அவளை கல்யாணம் பண்ணா ஊர் சிரிக்கும்”
“சிரிச்சா சிரிக்கட்டும் எனக்கு தாமரைதான் வேணும், வேற எந்த பொண்ணும் எனக்கு வேணாம் அவள் இல்லைன்னா நான் இல்லை” என அவன் சொல்ல விஜயனுக்கு பக்கென்றது.
இருப்பது ஒரே மகன் அவனும் இவ்வாறு பேசியதைக் கண்டு வியந்து
தாமரையின் தந்தை மணியிடம் சம்பந்தம் பேசலானார்.
மணியோ பயந்து முடியாது என சொல்ல அவரை சமாதானம் செய்து விட்டு வந்தார். விஜயனே சம்பந்தம் பேசியதைக் கண்ட ஊர் மக்கள் தங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வராமல் மணிக்கு வந்துவிட்டதே என்ற காழ்புணர்சியிலும் பொறாமையிலும் மணி காதுபடவே கேவலமாக பேசி கிண்டலடித்து என அவர்வர்கள் தங்களால் முடிந்தவற்றை செய்யலானார்கள். இதனால் மனம் உடைந்த மணியோ என்ன செய்து ஏது செய்வது என புரியாமல் திண்டாடிய அந்நேரம் அவர் முன் வந்து நின்றான் டாக்டர் சுந்தரம்
”ஐயா நான் இப்ப டாக்டர், நானும் உங்களை போல ஏழை குடும்பம்தான் ஏதோ படிப்பு எனக்கு வந்ததால டாக்டர் படிப்பு படிச்சேன், இதே ஊர்ல சொந்தமா ஆஸ்பிட்டல் கட்டி வைத்தியம் பார்க்கனும்னு இருக்கேன்”
“நல்லதுப்பா அப்படியே செய்” என அவர் சொல்ல அவனோ
”நான் தாமரையை ரொம்ப விரும்பறேன், அவளுக்காகதான் நான் இந்த டாக்டர் படிப்பையே படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் அவளை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் இத்தனை வருஷமும் அவளை தொந்தரவு செய்யாம இருந்தேன். இப்ப நான் வந்துட்டேன் நீங்களும் என் அப்பாவும் நண்பர்கள்தானே ரெண்டு பேருமே ஒரே வாழ்க்கைதான் வாழறீங்க, உங்க