முதலாளியம்மாவா வாழும், வாழ விடுவாங்களா அய்யோ பாவம் தாமரை” என ஏகத்துக்கும் பேசி விட்டு செல்ல மணிக்கு கஷ்டமாகிப் போனது.
உடனே அவர் தாமரைக்கு மாப்பிள்ளை பார்க்கலானார். அதற்காக ஏழையாக பார்க்க ஆசைபட்டார். அவரால் திருமணம் செய்ய போதிய பணம் இல்லாத குறை ஒன்று, மற்றொன்று மக்களின் கேலி பேச்சுக்களை கேட்டு விஜயனிடம் சென்று பணம் வாங்கும் தைரியம் இல்லாமல் அமைதியாக நாட்களை கடத்தினார்.
பள்ளிப்படிப்பு முடித்த கையோடு வைத்தி அதற்கு மேல் படிக்க பிடிக்காமல் தந்தையின் நிலங்களை பார்த்துக் கொண்டும், மணி நிலத்தில் இருந்தால் அவரது வீட்டுப்பக்கம் சென்று தாமரையுடன் காதல் செய்துக் கொண்டும் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருந்தான்.
ஒரு பக்கம் வைத்தி தாமரையின் காதல் கதை தெரிந்தும் மறுபக்கம் தாமரையை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த சுந்தரமோ வைத்தியை விட அதிகமாக பேர் புகழ் எடுத்து வந்து தாமரையின் தந்தையிடம் பேசி அவளை கரம்பிடிக்க வேண்டும் என நினைத்து விஜயனின் பணத்திலேயே வேறு ஊருக்குச் சென்று மருத்துவம் படிக்கலானான்.
நாட்கள் வருடங்களாகி சுந்தரமும் மருத்துவம் படித்து முடித்து மேற்கொண்டு படிக்க எண்ணியவன் முதலில் தாமரையை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் 5 வருடங்கள் கழித்து ஊர் திரும்பினான். அதற்குள் இங்கு வைத்தியும் தாமரையும் அப்படியொரு காதல் ஜோடிகளாகவே மாறினார்கள். அவள் இல்லையென்றால் தன் வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு அவர்களது நெருக்கமும் காதலும் அதிகமானது.
வைத்திக்கும் இப்போதுதான் இது காதல் என்றே புரியவர அவன் தாமரையிடம் எல்லை மீறி அவளுக்கு முத்தம் தருவது கட்டிப்பிடிப்பது வரை முன்னேறினான். ஆனாலும் ஒரு எல்லைக்கு மேல் தாண்டாமல் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும். வைத்தியும் இளைஞனாக மாறிவிட்டதும் பொறுப்பாக நிலத்தின் வேலைகளையும், கணக்கு வழக்குகளையும், நிர்வாகத்தையும் பார்ப்பதைக்கண்டு விஜயன் வைத்திக்கு திருமண ஏற்பாடு செய்யலானார். அதை தெரிந்துக் கொண்ட வைத்தியோ விஜயனிடம்
”அப்பா எனக்கு தாமரைதான் வேணும், அப்ப எனக்கு காதல்னா என்னன்னு தெரியலை