“இல்லை கோயிலுக்கு வந்தா பார்த்தேன், நாளைக்கு திருவிழாவாச்சே கண்டிப்பா வர்றதா சொன்னா நான் நாளைக்கும் அவளைப் பார்ப்பேன்” என சொல்ல சுந்தரத்திற்கு பற்றிக் கொண்டு வந்தது.
மறுநாள் திருவிழா என்பதால் ஊரே கோயிலுக்கு முன் கூடிவிட்டது. திருவிழா கடைகளில் பாதி கூட்டம் இருந்தது. அங்கிருந்த ரங்கராட்டினம் முதல் அனைத்திலும் வைத்தியும் சுந்தரமும் இருந்தார்கள். இதில் விளையாட்டு போட்டி வேறு அதில் இருவரும் சைக்கிளிங், ஓட்டப்பந்தயம், கபடி என இணைந்து விளையாடினார்கள்.
படிப்பில் மட்டுமே சுந்தரம் கெட்டி பலத்தில் இல்லை அனைத்து விளையாட்டுப் போட்டியிலும் வைத்தியேதான் ஜெயித்தான். அவனை விட அதிக வயது உடைய ஆண்களிடம் கூட விளையாடி அவனே ஜெயித்தான். திருவிழாவுக்கு வந்த தாமரையும் வைத்தி போட்டிகளில் ஜெயித்ததை பார்த்து சந்தோஷப்பட்டாள். வைத்தியும் பாவாடை தாவணி தலையில் மல்லிப்பூ என தேவதை போலவே தாமரை இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டான்
”நீ ரொம்ப மாறிட்ட” என வைத்தி அவளது தோளில் கைவைக்க அவள் கூச்சத்தில் நெளிந்தாள்
”இப்படியெல்லாம் கை வைக்க கூடாது தப்பு”
“ஏன் நான் எப்பவும் வைக்கறதுதானே”
“அது அப்ப இப்ப நான் பெரிய மனுஷியாயிட்டேனாம், ஆம்பளைங்க கிட்ட பேசக்கூடாதுன்னு அப்பா சொன்னாரு” என அவள் சொல்ல அவனுக்கு இன்னும் அவளை பிடித்துவிட்டது. தலை முதல் கால் வரை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்ட சுந்தரமோ
”எதுக்கு இப்ப இவளை இப்படி பார்க்கற எப்பவும் போலதான் இருக்கா, என்ன உடுப்பு மாறியிருக்கு அவ்ளோதானே” என சொல்ல வைத்தியோ அதற்கு