(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”ஏன் அழற பாரு உன் கன்னத்தில மை” என தன்னிடம் இருந்த துணியால் அவளது கன்னத்தை வேறு துடைத்து விட அவள் அதைத் தடுக்க

   

”நான்தான் பயப்படாத காட்டு கன்னத்தை காட்டு பாரு கருப்பா ஆயிடுச்சி காட்டு” என அவன் பேச அவளும் தனக்கு மிட்டாய் எல்லாம் தந்தானே என நம்பி அவனிடம் கன்னத்தைக் காட்டினாள். 

   

அவனும் அவளது இருகன்னத்திலும் நன்றாக அழுந்த தேய்த்து கருப்பை விரட்டிவிட்டு அவளைப் பார்த்தான். என்ன தோணிற்றோ சட்டென ஒரு பக்க கன்னத்தில் முத்தம் தர சுந்தரமும் அவளும் அதிர்ந்து அவனையே பார்க்க அவனோ சிரித்தான். அதில் தாமரையோ மீண்டும் ஓவென அழ ஆரம்பிக்க அவள் வாயில் புளியம்பழத்தை திணித்தான் வைத்தி. அதில் அவளது கவனம் மாறவே அவளிடம்

   

”ஏன் அழற நான்தான் வைத்தி நான் உன்னை பத்திரமா பார்த்துக்கறேன் அழாத சரியா” என சொல்ல அவளோ ம் என பலமாக தலையாட்டினாள்.

   

”சாப்பிடு வேற என்ன வேணும்னு சொல்லு வாங்கித்தாரேன்” என சொல்ல அவளோ 

   

”குச்சி மிட்டாய் குச்சி ஐஸ்” என்றாள்

   

”சரி சரி வாங்கித்தரேன் என்கிட்டயே இருக்கனும் நீ அப்பதான் வாங்கித்தருவேன் சரியா” என சொல்ல அவளும் பலமாக தலையாட்டினான்.

   

சுந்தரத்திற்கும் ஒரு ஆசை வந்தது அவனைப் போல தானும் முத்தம் கொடுக்கலாம் என நினைத்து அவளது கன்னதில் முத்தம் வைக்க போக அவள் அவனது கன்னத்தில் அடித்தாள்

   

”ஆஆஅ ஏன் அடிக்கற நான் தரக்கூடாதா” என கேட்க வைத்தியோ சிரித்தான்

   

”அவளை நீ தொடாத” என சொல்லி அவளை இழுத்து தனக்கருகில் வைத்துக் கொண்டான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.