(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

துரோகம் செஞ்சிடாத”

   

“சரிப்பா” என அவன் சொல்லவே அவரும் அங்கிருந்து சென்றுவிட வைத்தியும் சுந்தரமும் கைகளை கோர்த்துக் கொண்டு முன்னாடி விஜயன் நடக்க பின்னாடியே சென்றார்கள்.

   

பள்ளிக்கூடம் வரவும் வாத்தியாரிடம் பேசிவிட்டு இருவரையும் வகுப்பில் அமர வைத்தவர் வைத்தியிடம்

   

”நல்லா படிக்கனும் சரியா”

   

“சரிப்பா”

   

“நீயும்தான்” என சுந்தரத்தை பார்த்துக் கேட்க

   

”சரிங்கய்யா” என சொல்ல சந்தோஷமாக அங்கிருந்து அவர் சென்றுவிட்டார்.

   

அவர் சென்ற பின்பு புதிதாக சேர்ந்த மாணவர்கள் விளையாடிக் கொண்டும், வாத்தியாரைக் கண்டு அழுதுக் கொண்டும், ஒரு வித மிரட்சியுடனும் சில குழந்தைகள் இருந்தார்கள். அதில் இருக்கும் அனைத்து குழந்தைகளையும விட வைத்தி தெளிவாக இருந்தான். பணக்கார பிள்ளை அதற்கேற்ப அவனுக்கு செயின் மோதிரம் மாட்டியிருந்தார்கள். 

   

பள்ளி சீருடையில் கையில் பையுடன் பைக்குள் சிலேட்டுடன் நெற்றியில் விபூதி பட்டை என பார்க்கவே சமத்துப் பையனாக இருந்தான். அவனது பக்கத்தில் சுந்தரம் ஏழை விவசாயி மகன், அதே சீருடைதான் பை இல்லாமல் கையில் சிலேட் வைத்திருந்தான். அதில் எப்படி எழுதுவது என்று கூட தெரியாத வயதில் சுந்தரம் அழகாக அ ஆ இ என எழுதவும் அவனைக் கண்ட வைத்தியும்

   

”எனக்கு எனக்கு சொல்லித்தா” என கேட்க அவனும் இவனுக்கு சொல்லிக் கொடுக்கும் போது உச்சஸ்தாயியில் ஒரு பெண் குழந்தையின் அழுகுரல் கேட்க அந்த வகுப்பில் இருந்த 20 குழந்தைகளும் என்ன ஏது என திரும்பிப் பார்க்க அங்கு செந்தாமரை பள்ளி சீருடையில் தலை சீவி ரிப்பன் கட்டி கையில் ரப்பர் வளையல், காலில் கொலுசு கழுத்தில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.