போய் சேர்ந்துட்டா ஆனா, நான் என்ன செஞ்சேன் கீர்த்தனாவை போல தனியா வாழாம, சரண்யாவை போல கஷ்டப்பட்டு வைத்தியோட சேராம இப்படி ஒண்ணுமில்லாத வாழ்க்கையை வாழ்ந்துட்டேன். நான் பண்ணது தப்புதான். ஒரு சின்ன விசயத்தை வைச்சி வாழ்க்கை முழுக்க நான் வெறுப்பாவே வாழ்ந்துட்டேன். இனிமே என் அவசியம் இங்க இல்லை நான் போறேன்”
“அப்படி சொல்லாத தாமரை மன்னிச்சிடு தப்புதான் எங்கயும் போகாத” என்றான் கவலையாக
“விடு என்னை, யார் யாரை வேணும்னாலும் காதலிக்கலாம் ஆனா யாரை கல்யாணம் பண்ணிக்கறோம்ங்கறதுதான் முக்கியம், கல்யாணம் ஆன பின்னாடி கூட பழையதை நினைச்சி வாழ முடியாம நிக்கறது முட்டாள்தனம் நான் கிளம்பறேன்” என அவர் தாஸை பார்க்க அவன் உடனே வெளியே சென்று காரில் ஏறி ஸ்டார்ட் செய்த உடனே தாமரை ஏறிக் கொள்ள அவரைத் தடுத்தான் தேவா, அவன் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காத பட்சத்தில் அவனும் ஏறிக் கொண்டான்
”நீ ஏன் வர்ற”
“உன்னை நான்தானே கூட்டிட்டு வந்தேன் நானே உன்னை விடறேன் தப்பில்லை” என சொல்லி விட்டு இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்க வண்டியும் கிளம்பியது.
சுந்தரம் வீட்டு வாசலில் கார் நின்றதும் சுந்தரம் பறந்து வந்தார். காரைவிட்டு இறங்கிய தாமரையும் எதுவுமே நடக்காதது போல நேற்று கிளம்பி இன்று வந்ததாக நினைத்துக் கொண்டு வழக்கம் போல வீட்டுக்குள் சென்றுவிட அதைக்கவனித்த சுந்தரமோ தேவாவிடம் வந்தார்
”என்ன தேவா என்னாச்சி நீ கூட்டிட்டு வந்து விடற, அப்ப திரும்பவும் அவளை கூட்டிக் கொண்டு போய்டுவியா” என பயத்துடன் கேட்க அவனோ
”உன் கூட வாழ வந்திருக்கு தாமரை, இனிமேலயாவது அவள் மனசை புரிஞ்சிக்கிட்டு வாழப் பாரு போ” என சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டதும் கார் பறக்க சுந்தரம்