(Reading time: 29 - 57 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”இந்த ரோஜாக்களைப் பார்க்கறப்ப எனக்கு என் அப்பா அம்மா ஞாபகம் வரும், அவங்களுக்காகவே நான் இந்த செடிகளை வளர்க்கிறேன், அவங்களுக்கு இந்த பூக்களை அர்பணிக்கிறேன் இதனால அவங்க ஆத்மா சாந்தியாகும்னு நான் நம்பறேன் என் நம்பிக்கை வீண் போகாது பாட்டி” என சொல்ல உடனே அனைவரின் முகமும் வாடியது. 

   

ரோஜாவின் அப்பா அம்மாவின் இழப்பு அவர்களுக்கும் பெரிய வருத்தம்தான். அவர்கள் முகம் வாடுவதைக் கண்டதும் அந்த இடத்தையே மகிழ்ச்சியாக்க நினைத்து வழக்கம் போல அவள் உற்சாகமாக துள்ளிக் குதித்து பாட்டு பாடி அசத்தினாள்

   

பூவ பூவ பூவ பூவ பூவே 

பூவ பூவ பூவே

பூவே உந்தன் மேனியில் 

ஏதோ ஓர் வாசனை 

நீயும் கூட காதல் கொண்டாயோ

பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே

ஒவ்வொரு நாளும் 

ஒவ்வொரு அழகில் 

பூத்து நீ குலுங்கினாய் 

வண்ண வண்ண இதழ்களை

எல்லாம் எங்கே 

நீ வாங்கினாய்

 

   

என பாடி ஆடி தன் மகிழ்ச்சியை வெகுவாக வெளிப்படுத்தி தனது குடும்பத்தாரையும் சேர்த்து மகிழ வைத்தாள் ரோஜா. அன்றைய நாள் அவளுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியது.

   

மறுபக்கம் ஆனந்த் வந்ததும் என்னிக்கி இருந்தாலும் அவன் ஆபீஸ் வருவான் என்ற நம்பிக்கையில் வெங்கடேசனும் ஆனந்துக்காக ஒரு கேபின் ஒதுக்கினான். ஆனந்த் பற்றி அங்கு வேலை செய்பவர்களில் பலருக்கும் தெரிந்திருந்தது, சிலருக்குத்தான் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.