(Reading time: 2 - 4 minutes)

அதிசய உலகம் - 02. மரணத்தை கணிக்கும் அதிசய பூனை! - தேன்மொழி

Wow news

கதைகளை படிக்கும் போது இப்படி எல்லாம் நடக்குமா என சில சமயம் வியக்கிறோம்...! நடக்கவே நடக்காது என்று அடித்து சொல்கிறோம்...!

ஆனால் நிஜ உலகில் கதைகளில் வரும் கற்பனை சம்பவங்களை விட நம்ப முடியாத பல பல அதிசயங்கள் நடக்க தான் செய்கின்றன....

அது போன்ற சில சம்பவங்களை தான் இந்த தொடரில் தொகுத்தளிக்க போகிறோம்..

வியப்படைய தயாராகுங்கள்...!

ஸ்கர் எனும் பூனை ப்ராவிடன்ஸ் எனும் இடத்தில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் வாழ்கிறது.

பொதுவாக சுதந்திரமாக சுற்றி திரியும் இந்த பூனை, நோயாளிகளின் மரணத்தை சரியாக கணிப்பதாக சொல்கிறார்கள்.

டாக்டர்கள், நர்ஸ்களை போல தனியாக மருத்துவமனையில் ‘ரவுன்ட்ஸ்’ செல்லும் இந்த பூனை, மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களாக அது தெரிந்து கொள்பவர்களிடம் மட்டும் அருகே செல்லும், அவர்கள் அருகிலேயே தங்கும், தூங்கும்...!

இதுவரை ஆஸ்கர் தன் கணிப்பில் ஒரு முறையும் தவறாததால், ஆஸ்கர் ஒரு நோயாளியின் அருகே சென்று தூங்கினால், அந்த நோயாளியின் உறவினரை அழைத்து அவர் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக தெரிவிப்பதை புது பழக்கமாக கொண்டுள்ளது இந்த மருத்துவமனை.

ரு முறை அந்த மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் நோயாளி இறக்கும் தருணத்தில் இருப்பதாக கணித்தார், ஆனால் ஆஸ்கர் அந்த அறைக்கு வந்து விட்டு வெளியே சென்று விட்டது.

ஆஸ்கரின் கணிக்கும் சக்தி போய் விட்டதாக முதலில் நினைத்த அந்த டாக்டர், விரைவிலேயே தான் தன் கணிப்பில் தவறு செய்திருப்பதை கண்டுக் கொண்டார்!

பிரவுன் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியராக இருக்கும் டேவிட் தோசா எனும் டாக்டர், ‘நியூ இங்க்லான்ட் ஜர்னல் ஆஃப் மெடிசின்’ எனும் மருத்துவ பத்திரிகையில் ஆஸ்கர் பற்றி எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரே பின்னர் ‘மேகிங் ரவுன்ட்ஸ் வித் ஆஸ்கர்: தி எக்ஸ்ட்ராடினரி கிஃப்ட் ஆஃப் ஆன் ஆர்டினரி கேட்’ (Making Rounds With Oscar: The Extraordinary Gift of an Ordinary Cat ) எனும் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

ஸ்கரின் இந்த சக்திக்கு மருத்துவத் துறை பல பல காரணங்களை கூறினாலும், எதனால் ஆஸ்கருக்கு மட்டும் இந்த திறன் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத / புரியாத அதிசயமே!!!!

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.