(Reading time: 2 - 3 minutes)

அதிசய உலகம் - 04. கொழுப்பு நிறைந்த பால், வெண்ணெய், பிட்சாவிற்கு வரி - தேன்மொழி

Pizza

டென்மார்க் நாட்டில், 2011 ஆண்டில் கொழுப்பு சத்து நிறைந்த உணவு பொருட்களான வெண்ணெய், பால், சீஸ், பிட்சா, இறைச்சி, பதப்படுத்தப் பட்ட உணவு போன்றவற்றிற்கு 'கொழுப்பு வரி' என்ற புதிய வரி கொண்டு வரப்பட்டது.

டென்மார்க் மக்கள் விரும்பி உண்ணும் மேலே சொல்லப் பட்ட பொருட்களில் 2.3%க்கு அதிகமான நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) இருக்கிறது.

எனவே மக்களின் உடல் நலத்தை பேணி பாதுகாக்க இந்த அதிரடி புதிய வரியை அந்த நாட்டு அரசு அமல் செய்தது.

வரி அமலாகும் முன் குறைந்த விலையில் அந்த உணவு பொருட்களை வாங்கி விட கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

ஆனால் துரதிருஷ்டவசமாக 'பிசினஸ்' தொடர்பான பல காரணங்களுக்காக இந்த வரி 2012 ரத்து செய்யப் பட்டது.

2016ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி குறுகிய காலமே இருந்த இந்த வரி திட்டம் டென்மார்க் மக்களின் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

ந்தியாவில், கேரளா மாநிலத்தில் இதே கொழுப்பு வரி சென்ற ஆண்டு (2016) கொண்டு வரப் பட்டது குறிப்பிடத் தக்கது.

 

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

 {kunena_discuss:1125}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.