(Reading time: 2 - 3 minutes)

அதிசய உலகம் - 07. இந்த ஜீன்ஸ் 26000 ரூபாய்க்கு விற்கப்படும் காரணம் தெரியுமா உங்களுக்கு??? - தேன்மொழி

Dirty Jeans

சில நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் மிக பரபரப்பாக பேசப் பட்ட ஒரு விஷயம்!

அதை அதிசய செய்தி என்பதை விட விசித்திரமான செய்தி என்று தான் சொல்ல வேண்டும்.

மெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று புது ஜீன்ஸ் ஒன்றை அறிமுகப் படுத்தியது!

இதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா???

இருக்கிறது!

அதன் விலை 26350 இந்திய ரூபாய் (425 அமெரிக்க டாலர்கள்).

ரொம்பவும் தரமான ஜீன்ஸாக இருக்கும் என்கிறீர்களா?

அதெல்லாம் இல்லை, இது வேறு!

இந்த ஜீன்ஸ் சாதாரண ஜீன்ஸ் அல்ல, சேறு பூசப்பட்ட ஜீன்!

மாம், ஆமாம், சரியாக தான் படித்தீர்கள்!

ஒரு சாதாரண ஜீன்ஸில் சேறு பூசி பத்து மடங்கு விலையில் விற்கிறார்கள்!

நம்ப கஷ்டமாக தான் இருக்கிறது!

Dirty Jeans

ந்த விசித்திர ஜீன்ஸ் போதாதென்று, இதற்கான விற்பனை விபரத்தில் அவர்கள் சொல்லி இருக்கும் ‘இந்த ஜீன்ஸ் நீங்கள் கீழே இறங்கி அழுக்கு பூசிக் கொள்ளவும் தயங்க மாட்டீர்கள் என்பதைக் காட்டும்’ என்பதை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை

கிழிந்து போன ஜீன்ஸ் போட்டு சுற்றியது போதாதென்று இனி சேறு பூசிய ஜீன்ஸ் அணிந்து சுற்றுவார்கள் போலும்!

கிரேசி உலகம்!!!! வேற என்ன சொல்ல???

 

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

 {kunena_discuss:1125}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.