(Reading time: 2 - 3 minutes)

அதிசய உலகம் - 06. வானில் இருந்து எரிந்து விழுந்த பறவைகள் - தேன்மொழி

Birds

2013ஆம் ஆண்டு நெவடா எனும் பகுதியின் அருகில் வானில் பறந்துக் கொண்டிருந்த பறவைகள் திடீரென வெடித்து தீ காயத்துடன் இறந்து விழுந்தன.

மனதை உருக்கும் பறவைகளின் அந்த நிலைக்கான காரணம் புரியாமல் அனைவரும் குழம்பி தவித்தனர்.

விசாரணை மேற்கொண்டு அதற்கான காரணத்தை கண்டுப்பிடித்த போது, அந்த காரணம் விசித்திரமான ஒன்றாக இருந்தது.

ivanpa

நெவடாவின் அருகே இருக்கும் ஐவன்பா எனும் பாலவன பகுதியில் ஒரு வித்தியாசமான மின் ஆலை இருக்கிறது.

அந்த ஆலையில் இருக்கும் 300000க்கும் அதிகமான கண்ணாடிகள், நடுவில் இருக்கும் ஒரு பெரிய கோபுரத்தை நோக்கி சூர்ய ஒளியை பிரதிபலிக்கின்றன (reflection).

இப்படி உருவாகும் வெப்பம் அங்கிருக்கும் தண்ணீரை கொதிக்க வைக்க, அதில் இருந்து வரும் ஆவி, எரிசக்தியை உருவாக்கும் விதத்தில் ஆலையை வடிவமைத்து உள்ளனர்.

ண்ணாடிகளின் பிரதிபலிப்பின் மூலம் ஒரு மைய புள்ளியில் (central point) உருவாக்கப் படும் இந்த வெப்பம் ஆயிரம் டிகிரி செல்சியஸ் விட கூட அதிகமாக இருக்க கூடும் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

அப்படி பட்ட உயர்ந்த வெப்பத்தில் பல உலோகங்கள் கூட உருகி விடும். மென்மையான சிறகுகள் உள்ள பறவைகள் எப்படி அதை தாங்க முடியும்! அதனால் தான் அந்த பக்கம் சென்ற பறவைகள் எரிந்து கீழே விழுந்தன.

சூர்ய ஒளியைக் கொண்டு ‘கிரீன் எனெர்ஜி’ உருவாக்க தொடங்கிய திட்டத்தினால் இப்படி ஒரு பக்க விளைவு வரும் என யாரும் யோசித்ததாக தெரியவில்லை.

பறவைகளை அந்த பக்கம் பறக்க விடாமல் செய்ய பயமுறுத்தும் ஓசைகள் எழுப்பும் முயற்சியில் ஈடுப் பட்டுள்ளனர்.

ஆனால் இன்னமும் பறவைகளின் இறப்பு தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது என்பது வருத்தப் பட வைக்கும் ஒரு விஷயம்.

 

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

 {kunena_discuss:1125}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.