அதிசய உலகம் - 13. குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி - தேன்மொழி
2005 ஆண்டு முதல் கொலம்பியா நாட்டில் தவழும் குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.
எட்டு முதல் பதினெட்டு மாத குழந்தைகளுக்காக நடத்தப்படும் இந்த போட்டியில் குழந்தைகள் ஐந்து மீட்டர் தொலைவை தவழ்ந்து கடக்க வேண்டும்!
குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை வளர்க்கவும், அவர்கள் ஆரோக்கியமாக வளரவும் இந்த போட்டி உதவும் என்றும் இந்த போட்டி அமைப்பாளர்கள் சொல்கிறார்கள்.
வெற்றி பெரும் குழந்தைகளுக்கு விதவிதமான பரிசுகள் தரப்படுகிறது.
வருடந்தோறும் ஆயிரக் கணக்கில் குழந்தைகள் போட்டியில் கலத்துக் கொண்டாலும், ஒரு சில குழந்தைகள் மட்டுமே போட்டியை முழுவதுமாக முடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
{kunena_discuss:1125}