(Reading time: 2 - 4 minutes)

வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள் (WFH) - ஆன்லைன் ட்யூஷன் (Online Tutoring)

onlineTutoring 

என்ன திறமை தேவை?

ன்லைன் ட்யூஷன் / கோர்ஸ் என்பது கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாக இருக்கும் ஒரு துறை.

உங்களுக்கு ஏற்கனவே டீச்சிங் அனுபவம் இருந்தால், அல்லது, ஏதேனும் துறையில் நீங்கள் நிபுணராக இருந்தால் இந்த ஆன்லைன் ட்யூஷனை முயற்சி செய்து பார்க்கலாம்.

நமக்கு பரிச்சயமான வீட்டு ட்யூஷனை விட இதில் வருமானம் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்ன செய்ய வேண்டும்? 

பிரீலான்சராக இல்லாமல் இந்த வேலையை செய்ய விரும்பினால், இது போல ஆன்லைனில் ட்யூஷன் சேவைகளை வழங்கும் இணையத்தளங்களில் (அ) கம்பெனிகளில் உங்களின் திறமைகளை குறிப்பிட்டு ரெஜிஸ்டர் செய்யலாம். அவர்களுக்கு வேண்டிய திறமை உங்களிடம் இருந்தால், வழக்கமான இன்டர்வியூவை போலவே நடத்தி உங்களின் திறமைகளை பரிசிலித்து விட்டு தங்கள் டீமில் உங்களை சேர்த்துக் கொள்வார்கள்.

ஃபிரீலான்சராக இதையே செய்ய விரும்பினால், இதை ட்யூஷன் என்பதை விட ஒரு கோர்ஸாக வழங்கலாம். இதற்கான வெப்சைட்டுகளும் நிறைய உள்ளன. அவற்றில் ரெஜிஸ்டர் செய்து நீங்கள் வழங்க இருக்கும் கோர்ஸ் பற்றிய விபரங்களை சொல்லுங்கள்.  அந்த கோர்ஸுக்கான பீஸ், அட்டவனை போன்றவற்றை பார்த்து விருப்பம் உள்ளவர்கள் உங்களின் கோர்ஸில் சேர்வார்கள்.

வீட்டில் இருந்த படியே சம்பாதிக்க மட்டுமல்லாமல் நமக்கு பிடித்த துறையில் தொடர்ந்து இருக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பு.

 

{kunena_discuss:1136}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.