(Reading time: 2 - 4 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - கணவன் மனைவி பிடிவாதம்

கணவன் மனைவி பிடிவாதம்😟☄️

💥ணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.☄️

💥ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.

மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம் தரவில்லை.☄️

💥அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பி விடுவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.☄️

💥காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.☄️

💥மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள் ” மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!☄️

💥இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார். ☄️

💥முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பி விட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது. ☄️

💥இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டுஇருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ☄️

💥மனைவி என்பவள்

உன்னில் ஒரு பாதி ☄️

💥உன் உயிரில் ஒரு பாதி

உன் உடலில் ஒரு பாதி ☄️

💥அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோ வை மறக்க பழகுங்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான் .☄️

     

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.