(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ரைஸ் (சாத) பரோட்டா

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

 
லு (உருளைக்கிழங்கு) பரோட்டோ, மேத்தி பரோட்டா போல சாத பரோட்டாவும் செய்யலாம்.

  

தேவையான பொருட்கள்

சாதம்

உப்பு

மிளகாய்

பிசைந்த பரோட்டா மாவு

 

செய்முறை

லு பரோட்டாவிற்கு செய்வதுப் போலவே மாவை தயார் செய்துக் கொள்ளுங்கள். அதை சின்ன சின்ன உருண்டைகளாக பிரித்து வையுங்கள். ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து வட்ட வடிவில் தட்டிக் கொள்ளுங்கள்.

 

ஒரு பாத்திரத்தில் சாதத்துடன், உப்பு மற்றும் மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

தட்டி வைத்திருக்கும் மாவின் நடுவே இந்த் சாதக் கலவை சிறிது சேர்த்து அனைத்து முனைகளையும் ஒன்றாக்கி மூடவும்.

 

மீண்டும் முன்புப் போல சாதம் இருக்கும் மாவு உருண்டையை தட்டையாக உருட்டவும்.

  

அதை தவாவில் இட்டு, இரண்டுப் பக்கமும் மென்மையாகும் வரை போட்டு எடுக்கவும்.

 

சாத பரோட்டா ரெடி!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.