(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - இன்ஸ்டன்ட் சாதம்

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

   

தேவையான பொருட்கள்

அரிசி

பூண்டு

பச்சை மிளகாய்

இஞ்சி

வெங்காயம்

தக்காளி

உப்பு

மிளகாய் தூள்

கொத்தமல்லி

எண்ணெய்

 

செய்முறை

ரிசியை சாதமாக வடித்து வைத்துக் கொள்ளவும்.

  

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும்.

 

நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.

சிம்மில் வைத்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  

இப்போது, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்க்கவும்.

  

தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

  

தக்காளி நன்கு வெந்து கலந்தப் பிறகு, சாதத்தை சேர்க்கவும்.

  

நன்கு கலந்து கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.